மேற்கு இந்திய தீவுகள் - இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியினர் பயிற்சி மேற்கொள்வதற்ககா கிரிக்கெட் மைதானத்திர்கு வரும் வழியில், ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடம் ஆட்டோகிராப் பெற்று கொண்டனர்.


ரோஹித் சர்மா - க்யூட் பதில்


ரோஹித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளார் ராகுல் டிராவிட், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிட்ராப் வாங்கி, ஃபோட்டோ எடுத்து கொண்டனர். கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் உரையாடும் வீடியோ ஒன்றை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் டிவிட்டர் பக்கத்தில்  வெளியிடப்பட்டிருந்தது. அதில், ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து அட்டைகள் வழங்கினர். அதோடு, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டனர். 


அப்போது, ரோஹித் சர்மாவுடன் இருக்கும் ஃபோட்டோ ஒன்றில் பெண் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டார். அவருக்கு ஆட்டோகிராப் வழங்கிய ரோஹித் அவரது ஃபோட்டோவைப் பார்த்து சிரித்து கொண்டே, ‘இதில் நிறைய தாடி இருக்கே’ (‘ Too much beard') என்று சொன்னார். ரோஹித் சர்மா இப்போது ட்ரிம் செய்து விட்டார். 






முதல் டெஸ்ட் போட்டி 


வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்.  இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து,  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது. 


ஐ.சி.சி. டெஸ்ட் ரேங்கிங்


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10 இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அதேபோல், இதே போட்டியின்மூலம் சர்வதேச போட்டியில் அறிமுகமான இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 73வது இடத்தில் இடம் பிடித்துள்ளார். 


சமீபத்திய தரவரிசையை பற்றி பேசுகையில், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.  874 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்திலும், பாபர் அசாம் 862 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அதாவது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் முதல் 3 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா 103 ரன்கள் எடுத்ததன் மூலம், 729-ல் இருந்து 751 ஆக அதிகரித்து தரவரிசை பட்டியலில் 10-வது இடத்திற்கு முன்னேறினார். ரிஷப் பண்ட் 750 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறார். 







பந்துவீச்சாளர் தரவரிசை 


ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் பட்டியலில், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் 884 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.  இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ககிசோ ரபாடா மூன்றாவது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்காவது இடத்திலும் உள்ளனர். ஷாஹீன் அப்ரிடி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.


ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளனர். ரவீந்திர ஜடேஜா மூன்று இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்தார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் சர்மா மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் உள்ளார், அதே நேரத்தில் மூன்று இந்திய வீரர்கள் பந்துவீச்சாளர்களில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா 764 ரேட்டிங்குடன் 10வது இடத்தில் உள்ளார்.