மிக வேகமான கைகளுக்குச் சொந்தக்காரர் எனப்படும் தோனியையே வியக்க வைக்கும் ஸ்டெம்பிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் என்ற விளையாட்டு தொடங்கி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டு சில மறக்க முடியாத சம்பவங்களை உருவாக்கியுள்ளது. விளையாட முடியாத பந்து வீச்சுகள், வினோதமான டிஸ்மிஸ்கள், பிரம்மாண்டமான சிக்ஸர்கள், என அனைத்தும் ரசிகர்களின் மனதில் கிரிக்கெட் விளையாட்டு குறித்த நினைவுகளை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற உதவியது.
அதேபோல், ஸ்டம்பிங் என்று வரும்போது, ஸ்டம்புகளுக்குப் பின்னால் தனது சிறப்பான செயல்பாட்டினால் ரசிகர்களின் இதயங்களை வென்ற மகேந்திர சிங் தோனியை விட சிறந்த விக்கெட் கீப்பர் யாரும் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இல்லை. குறிப்பாக அவரது நோ-லுக் டிஸ்மிஸ்கள் முதல் மின்னல் வேக ஸ்டம்பிங் வரை, தோனி சில விதிவிலக்கான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். அப்படியான புகழுக்குச் சொந்தக்கரரான தோனி ஆச்சரியப்படும் அளவிற்காக ஒரு ஸ்டெம்பிங் நிகழ்த்தப்பட்டுள்ளது. அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிவருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜே லென்டன் சமூக ஊடகங்களில் பலரால் "எல்லா காலத்திலும் மிகப்பெரிய ஸ்டம்பிங்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் லெக் சைடில் வீசப்பட்ட ஒரு டெலிவரி ஆகும், அதை கீப்பர் கைப்பற்றினார். வீடியோவைப் பார்க்கும் போது பேட்டரை ஸ்டம்பிங் செய்வதற்கான தீவிர முயற்சியாகத் தெரியவில்லை, கீப்பர் பந்தை கைப்பற்றியவுடன் விரைவாக ஸ்டம்பை நோக்கி வீசினார். பந்து ஸ்டெம்பில் பட்டதும் பெயில்ஸ் விழுந்து விட்டது. இதனை பேட்டர் யோசிப்பதற்குள் இது நடந்து விட்டதால், அவர் மிகவும் ஏமாற்றத்துடன் மைதானத்தில் இருந்து வெளியாறினார்.
இணையத்தில் வைராலாகி வரும் வீடியோ வெளியான பிறகு, சிலர் அதை ஸ்டம்பிங் அல்லது ரன்-அவுட் என்று கருதலாமா என்று கூட விவாதித்தனர். ஆனால், விக்கெட் வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பேட்டர் ரன் எடுக்க முயற்சிக்காததால், அது ஸ்டம்பிங் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.