Virender Sehwag Divorce: மனைவியை விவாகரத்து செய்கிறாரா சேவாக்? அதிரடி மன்னன் வாழ்க்கையில் நடந்தது இதுதான்!
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சேவாக் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். அதிரடி மன்னன், சிக்ஸர் மன்னன் என்று அழைக்கப்படும் சேவாக் கடந்த 2004ம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். சேவாக் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆர்யவீர் மற்றும் வேதாந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
விவாகரத்து செய்துவிட்டாரா சேவாக்?
இந்த நிலையில், சேவாக் - ஆர்த்தி தம்பதியினர் கடந்த சில மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரிந்து வாழும் இவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாவிட்டாலும் சேவாக் மற்றும் ஆர்த்திக்கு நெருக்கமானவர்கள் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன?
சேவாக் மற்றும் ஆர்த்தி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின்பற்றுவதில் இருந்து விலகியுள்ளனர். அதாவது, அன்பாலோ செய்துள்ளனர். அப்போதே இந்த சந்தேகம் பலருக்கும் எழுந்தது. சேவாக் கடந்தாண்டு வெளியிட்ட தீபாவளி கொண்டாட்ட புகைப்படத்தில் அவருடன் அவரது தாய் மற்றும் மகன்களுடன் மட்டுமே இருந்தனர். அந்த புகைப்படத்தில் அவரது மனைவி ஆர்த்தி இல்லை.
மேலும், சமீபத்தில் கேரளாவின் பாலக்காட்டிற்குச் சென்ற சேவாக் தனியாகவே சென்றிருந்தார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டபோதும் அவரது மனைவி ஆர்த்தியை அவர் குறிப்பிடவில்லை. இவ்வாறு தொடர்ந்து சேவாக்கின் கடந்த சில மாத சமூக வலைதள கணக்கின் செயல்பாடுகளில் அவரது மனைவியின் புகைப்படமோ, அவரைப் பற்றிய தகவலோ இடம்பெறவில்லை.
தொடரும் மெளனம்:
இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே பிரிந்து தனித்தனியாக வாழ்வதாக அவர்களது உறவினர்கள் கூறி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சேவாக் - ஆர்த்தி இருவரும் தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற இவர்களது திருமணத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், இந்த விவகாரத்து தொடர்பான தகவல் வெளியான பிறகு ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தனியுரிமை ஆக்கியுள்ளார்.
46 வயதான சேவாக் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 23 சதங்கள், 6 இரட்டை சதங்கள் மற்றும் 32 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 586 ரன்கள் எடுத்துள்ளார். 251 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 இரட்டை சதம், 15 சதங்கள் மற்றும் 38 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 273 ரன்கள் எடுத்துள்ளார். 19 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 394 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் 104 போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 16 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 728 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சேவாக் மட்டுமே இந்தியா சார்பில் இரண்டு முறை முச்சதம் அடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.