இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நேற்று விலகியுள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 7 ஆண்டுகள் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் விராட் கோலி கேப்டனாக ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகியவற்றில் எவ்வாறு செயல்பட்டார்? இந்த மூன்று தரப்பு போட்டிகளிலும் அவருடைய கேப்டன்சி ரெக்கார்டுகள் என்னென்ன?

டெஸ்ட் கேப்டன்:

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி 2014ஆம் ஆண்டு முதல் முறையாக செயல்பட்டார். டெஸ்ட் கேப்டனாக பங்கேற்ற முதல் மூன்று இன்னிங்ஸில் சதம் கடந்து அப்போதே தன்னுடைய சாதனைப் பட்டியலை தொடங்கினார். அந்த ஆஸ்திரேலிய தொடரிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 692 ரன்கள் அடித்து அசத்தினார். 

விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன் செயல்பாடு:

கேப்டன்கள் போட்டிகள்  வெற்றி  தோல்வி  டிரா வெற்றி%
கிரேம் ஸ்மித் (2003-2014) 107 53 29 27 48.62
ரிக்கி பாண்டிங்(2004 2010) 77 48 16 13 62.33
ஸ்டீவ் வாக்(1999-2004) 57 41 9 7 71.92
விராட் கோலி(2014-2022) 68 40 17 11 59.70

கேப்டனாக் கோலி அடித்த ரன்கள்:

போட்டிகள் ரன்கள் சதம் சராசரி 
68 5864 20 54.80

  7ஆண்டுகால கோலியின் டெஸ்ட் கேப்டன்சிப்பில் இந்திய அணி விளையாடிய 24 டெஸ்ட் தொடர்களில் வெறும் 5 தொடர்களில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற 11 டெஸ்ட் தொடரையும் விராட் கோலி தலைமையிலான அணி கைப்பற்றியுள்ளது. இவை தவிர 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020 மார்ச் மாதம் வரை தொடர்ச்சியாக 42 மாதம் விராட் கோலியின் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியது. 

ஒருநாள் கேப்டன் :

இந்திய ஒருநாள் அணிக்கு முழுநேர கேப்டனாக விராட் கோலி 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போது முதல் 2021ஆம் ஆண்டு வரை இவர் 95 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டார். மேலும் இவர் தலைமையில் இந்திய அணி 19 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது. அதில் 15 ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 

ஒருநாள் கேப்டனாக அதிக வெற்றி சதவிகிதம்(குறைந்தது 50 போட்டிகளில்):

கேப்டன்கள் போட்டிகள் வெற்றி தோல்வி சமன் முடிவில்லை வெற்றி %
கிளைவ் லையுடு  84 64 18 1 1 77.71
ரிக்கி பாண்டிங் 230 165 51 2 12 76.14
ஹன்சி குரோனி 138 99  35 1 3

 73.70

விராட் கோலி      95 65 27  1  2 70.43
மைக்கேல் கிளார்க்  74 50 21  0  3  70.42

கேப்டனாக கோலி அடித்த ரன்கள்: 

போட்டிகள் ரன்கள் சதம் சராசரி 
95 5449 21  72.65

ஒருநாள் கேப்டனாக அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரராக விராட் கோலி இருந்தார். இவை தவிர ஒருநாள் கேப்டனாக ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி 2 முறை படைத்துள்ளார். 

 

டி20 கேப்டன்:

இந்திய அணியின் டி20 கேப்டனாகவும் 2017ஆம் ஆண்டு முதல் விராட் கோலி செயல்பட்டு வந்தார். அப்போது முதல் 2021 வரை 50 டி20 போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். மேலும் இந்த காலகட்டத்தில் இந்திய அணி விளையாடிய 17 டி20 தொடர்களில் வெறும் 2ல் மட்டுமே தோல்வி அடைந்தது. 15 டி20 தொடர்களை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. 

 

விராட் கோலியின் டி20 கேப்டன் செயல்பாடு:

போட்டிகள் வெற்றி தோல்வி வெற்றி %
50 30 16 64.58

கேப்டனாக கோலி அடித்த ரன்கள்:  

போட்டிகள் ரன்கள் சதம் சராசரி 
50 1570 0  47.57 

இவ்வாறு கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று தரப்பு  கிரிக்கெட்டிலும் கேப்டனாக விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். அவருடைய சில சாதனைகள் பல ஆண்டுகாலம் நீடிக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்க முடியாது. 

மேலும் படிக்க: டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகல்: கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழையில் நினையும் கோலி