இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்ட போது பிசிசிஐ மூலமாக அவரது ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் விராட் கோலி நேற்று திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறி உள்ளார்.


இந்நிலையில் இன்று தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தில் வைத்து இருக்கும் விராட் கோலி தற்போது திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.


 






கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, “விராட், தலை நிமிர்ந்து செல்லலாம். நிச்சயமாக இந்தியாவின் மிகவும் ஆக்ரோஷமாகவும் வெற்றிகரமாகவும் வழி நடத்திய கேப்டன். இந்த நாள் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமான நாள்” இவ்வாறு தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 






விராட் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் வேகமாக முன்னேறி உள்ளது. அவரது தனிப்பட்ட முடிவுகளை பிசிசிஐ மிகவும் மதிக்கிறது. எதிர்காலத்தில் இந்த அணியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல அவர் ஒரு முக்கிய வீரராக இருப்பார். விராட் கோலி ஒரு சிறந்த வீரர், என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


 






விராட் கோலி, கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டதற்கு வாழ்த்துகள். நீங்கள் எப்போதும் அணிக்காக 100 சதவீத உழைப்பை கொடுத்தீர்கள், அதையே எப்போதும் செய்வீர்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.


 






இந்திய டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துகள். உங்களது வெற்றியின் புள்ளி விவரங்கள் பொய் சொல்லவில்லை. கோலி இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் மட்டுமல்ல, உலகின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். மிக பெருமையாக இருக்கலாம். நீங்கள் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் என சினிமா நட்சத்திரங்களும் கோலிக்கு ஆதரவாக வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.