உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் விராட்கோலி. இந்திய அணியின் மூன்று வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பு வகித்தவர். கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்தவர். பின்னர், இந்திய அணி நிர்வாகம் அவரை ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. ஆனால், அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமாக தோற்றது. இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், இந்திய கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக விராட்கோலி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பால் இந்திய ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரஹானே, புஜாரா, கே.எல்.ராகுல். ரிஷப் பண்ட், மயங்க் அகர்வால் ஆகியோரும் மிகவும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர், கேப்டன் விராட்கோலி சில இன்னிங்ஸ்களில் சிறப்பாக ஆடினாலும் இந்த தொடர் அவருக்கும் மிகவும் மோசமானதாகவே அமைந்தது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரலையில் காண : Live | Palamedu Jallikattu 2022 Live | ஜல்லிக்கட்டு 2022 நேரலை | Pongal 2022 | Jallikattu Live
எந்த போட்டிகளாக இருந்தாலும் சதங்களை சகட்டு மேனிக்கு விளாசி வந்த கோலிக்கு கடந்த ஓராண்டுகளாக சதம் என்பது எட்டாக்கனியாக மாறிவிட்டது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் அவர் சதமடித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்திய அணியின் ஜாம்பவானும், காட் ஆப் கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்தவர் விராட்கோலி.
இந்திய அணிக்கு நெருக்கடியான நேரத்தில் 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட்கோலி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். இதில் இந்திய அணி 40 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ளது. 17 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 11 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்