இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றனர். இதனால் மூன்று போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமான தோல்வி அடைந்தது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் 7ஆவது முறை டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்துள்ளது. 

 

இந்நிலையில் வழக்கம் போல் இந்தத் தொடரிலும் இந்திய அணி பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. இந்திய அணியின் பேட்டிங் தொடர்பாக முன்னாள் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,”இந்தப் போட்டியில் நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டம் என்னை மிகவும் எரிச்சல் அடைய வைத்தது. ஏனென்றால் உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி பும்ரா மற்றும் ஷமியை பந்துவீச வைப்பார்கள் என்று பார்த்தேன். ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் பேட்ஸ்மேன்கள் செட் ஆக நேரம் எடுக்கும். அதனால் அவர்கள் பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. 


இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன் நான் நிறையே நம்பினேன். இந்திய அணி இத்தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்லும் என்று எதிர்பார்த்தான். ஆனால் அதற்கு மாறாக அடுத்த இரு போட்டிகளில் இந்திய அணி மோசமாக விளையாடி தொடரை இழந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆடுகளம் சற்று சவாலாக அமைந்தாலும் இந்திய வீரர்கள் அதில் சரியாக ஆடவில்லை. வாண்டரரஸ் மற்றும் கேப்டவுன் டெஸ்டில் தென்னாப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். தொடரை வெல்ல நினைத்த இந்திய அணியின் கனவு நிறைவேறாத கொடுங்கனவாக மாறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி அடித்த ஸ்கோர்கள்:

முதல் டெஸ்ட்:   327 & 174

இரண்டாவது டெஸ்ட்: 202 & 266

மூன்றாவது டெஸ்ட்:  223 & 198

தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்தியாவின் டெஸ்ட் தொடர் செயல்பாடு:

விளையாடிய தொடர்கள் வெற்றி தோல்வி டிரா
8 0 7 1

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க மண்ணில் 1992 முதல் 2022 வரை 8 முறை டெஸ்ட்  தொடரில் பங்கேற்று உள்ளது. அவற்றில் 7 முறை தோல்வி அடைந்துள்ளது. 2010-11 தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: என்ன கொடுமை சார் இது...- உதிரிகளைவிட கம்மியா ரன் அடிச்ச 3 இந்திய பேட்ஸ்மேன்கள்