மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, டெஸ்ட் போட்டிகளில் தனது 29வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் இரண்டாவது டெஸ்டின் 2வது நாளில் தனது 76வது சர்வதேச சதத்தை எட்டினார்.


500வது போட்டி


இந்த சதத்தின் மூலம் பல சாதனைகளை முறியடித்துள்ள கோலி, ஆட்டத்தில் களமிறங்கியபோதே ஒரு சாதனையை முறியடித்தார். இந்த ஆட்டம் விராட் கோலியின் 500வது சர்வதேச ஆட்டம் ஆகும். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் உள்ள சாதனை பட்டியலில் கோலி நான்காவதாக இணைந்துள்ளார்.



லாராவை முந்திய கோலி


டெஸ்ட் போட்டிகளில் கோலி தனது 29வது சதத்தை ஷானன் கேப்ரியல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து எட்டினார், மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலிலும் நுழைந்தார். 34 வயதான கோலி, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2013 இல் ஓய்வு பெற்ற பிறகு, இந்தியாவின் நம்பர்.4 பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோலி ஏற்கனவே இந்த இடத்தில் ஆடும் வீரர்களிடையே அதிக டெஸ்ட் சதம் அடித்தோர் பட்டியலில், முதல்-5 இடங்களுக்குள் இருந்தார். அதோடு இந்த சதத்தின் மூலம், அந்த எண்ணிக்கையை உயர்த்தி மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் பிரையன் லாராவை விஞ்சினார்.


தொடர்புடைய செய்திகள்: CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்


நம்பர் 4 இல் இறங்கி அதிக சதம்


லாரா 24 சதங்களுடன் 4-வது இடத்தில் இருந்தார். இப்போது அவரை முந்திய கோலி அவரை 5 வது இடத்திற்கு தள்ளினார். இப்போது டெண்டுல்கர், ஜாக் காலிஸ் மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோருக்கு பின்னால் பின்னால் கோலி உள்ளார்.


டெஸ்ட் வரலாற்றில் நம்பர் 4 இல் இறங்கி அதிக சதம் அடித்தவர்கள் பட்டியல்: 


சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 44


ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 35


மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) - 30


விராட் கோலி (இந்தியா) - 25


பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) - 24



பட்டியலில் கோலியை நெருங்கும் இருவர்


இந்த பட்டியலில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 19 சதங்களுடன் 4வது இடத்தில் கோஹ்லிக்கு நெருக்கமாக உள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தும் ரூட்டின் அதே எண்ணிக்கையிலான சாதகங்களை பெற்றுள்ளார். இந்த மூவரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஃபேப்-4 இன் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார்கள், அதில் நான்காவது வீரர் கேன் வில்லியம்சன். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் 3வது இடத்தில் விளையாடுகிறார். நடந்துகொண்டிருக்கும் டெஸ்டில் ரோஹித் சர்மா (80), ரவீந்திர ஜடேஜா (61), மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் (56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், கோஹ்லியின் சிறப்பான சதத்தாலும், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 438 ரன்களுக்கு முடித்தது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.