இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் தியோதர் டிராபி, சுமார் 4 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விளையாடப்பட இருக்கிறது. லிஸ்ட் ஏ  டோட்னமெண்டான தியோதர் டிராபி 50 ஓவர் வடிவமாக நடத்தப்படும். இந்திய அணி விளையாடும் ஒருநாள் போட்டி தொடருக்கு செலக்ட் ஆக ஒவ்வொரு வீரரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பர். 


இம்முறை மொத்தம் 6 அணிகள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலம், வடகிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம் ஆகிய அணிகள் களமிறங்குகின்றன. 


தியோதர் டிராபி எப்போது தொடங்குகிறது..?


தியோதர் டிராபியின் வரவிருக்கும் சீசன் ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 


தியோதர் டிராபி போட்டிகள் எங்கு நடைபெறும்?


தியோதர் டிராபி போட்டிகள் அனைத்தும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியானது  சிகெம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


போட்டி தொடர் எப்படி நடைபெறும்..? 


6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதாவது அனைத்து அணிகளும் மற்ற அணிக்கு எதிராக ஒருமுறை விளையாடும். இறுதியில், புள்ளிப் பட்டியலில் முதல்-2 இடங்களைப் பிடிக்கும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.


எங்கே பார்ப்பது..?


தியோதர் டிராபி போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு குறித்து பிசிசிஐயால் இதுவரை தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், சில போட்டிகளை பிசிசிஐ இணையதளத்தில் ஒளிபரப்பலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


முழு போட்டி அட்டவணை இதோ:


தியோதர் டிராபி 2023 போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும்.


முதல் போட்டி - வடக்கு மண்டலம் vs தெற்கு மண்டலம் - ஜூலை 24 


இரண்டாவது போட்டி - கிழக்கு மண்டலம் vs மத்திய மண்டலம் - ஜூலை 24 


மூன்றாவது போட்டி - மேற்கு மண்டலம் vs வடகிழக்கு மண்டலம் - ஜூலை 24 


நான்காவது போட்டி - வடக்கு மண்டலம் vs மத்திய மண்டலம் - ஜூலை 26 


ஐந்தாவது போட்டி - கிழக்கு மண்டலம் vs வட கிழக்கு மண்டலம் - ஜூலை 26 


ஆறாவது போட்டி - ஜூலை 26 அன்று மேற்கு மண்டலம் vs தெற்கு மண்டலம் - ஜூலை 26 


7வது போட்டி - வடக்கு மண்டலம் vs கிழக்கு மண்டலம் - ஜூலை 28


8வது போட்டி - மத்திய மண்டலம் vs மேற்கு மண்டலம் - ஜூலை 28


9வது போட்டி - தெற்கு மண்டலம் vs வடகிழக்கு மண்டலம் - ஜூலை 28


10வது போட்டி - வடக்கு மண்டலம் vs மேற்கு மண்டலம் - ஜூலை 30


11வது போட்டி - கிழக்கு மண்டலம் vs தெற்கு மண்டலம் - ஜூலை 30 


12வது போட்டி - மத்திய மண்டலம் vs வடகிழக்கு மண்டலம் - ஜூலை 30


13வது போட்டி - வடக்கு மண்டலம் vs வடகிழக்கு மண்டலம் - ஆகஸ்ட் 1


14வது போட்டி – மத்திய மண்டலம் vs தெற்கு மண்டலம் - ஆகஸ்ட் 1


15வது போட்டி - கிழக்கு மண்டலம் vs மேற்கு மண்டலம் - ஆகஸ்ட் 1


இறுதிப் போட்டி - ஆகஸ்ட் 3ஆம் தேதி


அனைத்து 6 அணிகளையும் இங்கே பார்க்கவும்


தென் மண்டலம் - மயங்க் அகர்வால் (கேப்டன்), ரோஹன் குன்னுமால் (துணை கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ராயுடு, கேபி அருண் கார்த்திக், தேவ்தத் படிக்கல், ரிக்கி புய் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், வித்வத்குமார் வ கவேரக், வித்வத் கவேரக், விஜய், கவேரக், விஜய் கர், சாய் கிஷோர்.


மேற்கு மண்டலம் -   பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஹார்விக் தேசாய், ஹெட் படேல், சர்ஃபராஸ் கான், அங்கித் புவானே, சமர்த் வியாஸ், ஷிவம் துபே, அதித் சேத், பார்த் பூட், ஷம்ஸ் முலானி, அர்ஜன் நாக்வாஸ்வாலா, சிந்தன் காஜா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.


வடக்கு மண்டலம் - நிதிஷ் ராணா (கேப்டன்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரான் சிங், எஸ்ஜி ரோஹில்லா, எஸ் கஜூரியா, மன்தீப் சிங், ஹிமான்ஷு ராணா, விவ்ராந்த் சர்மா, நிஷாந்த் சிந்து, ரிஷி தவான், யுத்வீர் சிங், சந்தீப் சர்மா, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, மயங்க் அரோரா.


மத்திய மண்டலம் - வெங்கடேஷ் ஐயர் (கேப்டன்), மாதவ் கௌசிக், சிவம் சௌத்ரி, யாஷ் துபே, யாஷ் கோதை, ரிங்கு சிங், ஆர்யன் ஜூயல், உபேந்திர யாதவ், கரண் ஷர்மா, ஆதித்யா சர்வதே, யாஷ் தாக்கூர், சிவம் மாவி, அனிகேத் சவுத்ரி (துணை கேப்டன், அகாஷ் மத்வால் கான்),


கிழக்கு மண்டலம் - சௌரப் திவாரி (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சுதீப் கராமி, சுப்ரான்ஷு சேனாபதி, ரிஷவ் தாஸ், உத்கர்ஷ் சிங், குமார் குஷாக்ரா, அபிஷேக் போரல், விராட் சிங், ரியான் பராக், ஷாபாஸ் அகமது, அவினவ் சிங், முராஸ் சவுத்ரி.


வடகிழக்கு மண்டலம் - ஆஷிஷ் தாபா, லாங்லோனியாம்பா (கேப்டன்), லாரி சங்மா, நிலேஷ் லாமிச்சானி, அனூப் அஹ்லாவத், லீ யோங் லெப்சா, பல்ஜோர் தமாங், ரெக்ஸ் ராஜ்குமார், ஜெஹு ஆண்டர்சன், கம்சா யாங்போ, அபிஷேக் குமார், இம்லிவதி சிங் அம்போட், நபீரோஜ்ம் அம்தூர்.