இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வலை பயிற்சியின் போது ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்து இடுப்பில் பட்டு காயமடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.


விராட் கோலி காயம்


இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே விராட் கோலி நெட் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தபோது ஹர்ஷல் படேல் வீசிய வேகமான பந்து விராட் கோலியின் இடுப்பை காயப்படுத்தியது. காயம் அடைந்த விராட் கோலி விரைவில் மைதானத்தை விட்டு வெளியேறினார். விராட் கோலி குறித்த அறிவிப்பு விரைவில் அணி நிர்வாகத்தால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அது குறித்த அப்டேட் வந்துள்ளது.




இன்றியமையாத வீரர்


விராட் கோலியின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்கள் கவலை அடைந்து அவரது உடல்நலம் குறித்த செய்தியை அறிய ஆவலாக உள்ளனர். இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்தவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் ஆட்டத்தின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.


தொடர்புடைய செய்திகள்: Rain alert: வங்க கடலில் வானிலை மாறுது..! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! காட்டாறாக பெய்ய போகுது கனமழை!


ரசிகர்கள் கவலை


கடந்த சில வருடங்களாக ஃபார்மில் இல்லாமல் இருந்த அவர் தற்போதுதான் ஃபார்முக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக்கோப்பையில் விராட் கோலியின் ஃபாரம் தொடர்ந்தால் இந்தியாவிடம் கப் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று பரவலாக கூறப்பட்ட நிலையில் இப்படி அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணியினரையும், ரசிகர்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. 




விராட் கோலி நாளை விளையாடுவார்


சமீபத்திய தகவல்களின் படி, விராட் கோலிக்கு பெரிய அடிகள் எதுவும் இல்லை என்றும் அவர் நலமாக உள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளன. விராட் கோலி படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் நெட் பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவித்த நிலையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கண்டிப்பாக சேமி ஃபைனலில் அவர் களமிறங்குவார் என்றும் தகவல்கள் வந்துள்ளன. 


ரோகித் காயம்


முன்னதாக செவ்வாயன்று, கேப்டன் ரோஹித் சர்மாவும் நெட் பயிற்சியின் போது காயமடைந்தார். ஆனால், சிறிது நேரம் கழித்து ரோகித் சர்மா மீண்டும் களம் இறங்கினார். ரோஹித் ஷர்மாவும் தனது ஃபிட்னஸ் அப்டேட்டை இன்று வெளியிட்டார். அரையிறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியுடன் இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.