டி20 உலகக் கோப்பை 2024:
ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சூப்பர் 8 சுற்று:
அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும். புள்ளிப்பட்டியலின்படி, குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதேபோல குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து, குரூப் - சி பிரிவில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தேர்வாகியுள்ளன.
குரூப் டி பிரிவில் இருந்து தென்னாப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் 8 சுற்று மற்றும் நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்த இந்திய அணி வீரர்கள் நேற்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சென்றனர்.
பீச் வாலிபால் விளையாடிய இந்திய வீரர்கள்:
இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் இன்று (ஜூன் 17) பார்படாஸ் பீச்சில் உற்சாகமாக வாலிபால் விளையடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. இதில், இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றனர்.
இதில் ஒரு பக்கம் ரிங்கு சிங் தனது முழு ஃபிட்னஸையும் காட்டியுள்ளார். 6 பேக் உடலுடன் ரிங்கு சிங் இருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகிய நிலையில், இன்னொரு பக்கம் 8 பேக் உடற்கட்டுடன் விராட் கோலி உற்சாகத்துடன் பீச் வாலிபால் விளையாடி இருக்கிறார். இதனிடையே சூப்பர் 8 சுற்றில் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது இந்திய அணி.
மேலும் படிக்க: UEFA Euro 2024: யுஇஎஃப்ஏ யூரோ கோப்பை.. 23 வினாடிகளில் முதல் கோல்; வரலாற்று சாதனை படைத்த அல்பேனியா!
மேலும் படிக்க: "பாபர் அசாம் தகுதியற்றவர்" இந்திய முன்னாள் வீரர் சேவாக் ஆவேசம் - ஏன் அப்படி சொன்னார்?