கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாது டி20 போட்டியில், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. இதனால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. 


கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்தவர் விராட்கோலி. இவர் கடந்தாண்டு இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். பின்னர் அணி நிர்வாகம் அவரை ஒருநாள் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது. டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக தொடர்ந்த கோலி கடந்த மாதம் தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு, தனது டெஸ்ட் கேப்டன்சியையும் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார்.


அதனை தொடர்ந்து, விராட் கோலி - ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியின்போது ரோஹித் ஷர்மாவை பற்றி விராட் கோலி பேசியது மைக்கில் பதிவாகியுள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. இஷான் கிஷான் 2 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் – விராட் ஜோடி நிதானமாகவும், பொறுப்பாகவும் ஆடியது. ரோஹித் 19 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், விராட்கோலி பொறுப்புடனும், நிதானத்துடனும் ஆடினர்.


எட்டாவது ஓவரில் விராட் - ரோஹித் இணை களத்தில் இருந்தபோது, ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த பொல்லார்ட் ரோஹித் ஷர்மாவை ரன் அவுட்டாக்க முயன்றார். ஆனால், லைனை தொட்ட ரோஹித் அவுட்டாவதற்கான வாய்ப்பை மறுத்தார். இதை கவனித்த கோலி, “அவ்வளவு எளிதாக அவரை ரன் அவுட் செய்ய முடியாது போலி (பொல்லார்ட்)” என தெரிவித்திருக்கிறார். இது மைக்கில் பதிவாகி இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


வீடியோவைக் காண: 






 இந்திய அணிக்கு இது 100வது டி20 கிரிக்கெட் வெற்றி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண