இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முக்கிய நட்சத்திர வீரருமானவர் விராட்கோலி. இவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று ஆடி வருகிறார். இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், டி20 தொடரை அபாரமாக ஆடி வென்றது.


இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரராகிய விராட்கோலி இன்று வழக்கமான பயிற்சியில் பங்கேற்கவில்லை.




கடைசியாக நடைபெற்ற டி20 போட்டியில் விராட்கோலிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த காயத்தின் காரணமாகவே விராட்கோலி இன்றைய பயிற்சியில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. காயத்தின் தன்மை காரணமாக அவர் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஆடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விராட்கோலி விளையாடுவது சந்தேகம் என்றே செய்தி வெளியிட்டுள்ளனர்.






கேப்டன்சியில் இருந்து விலகியது முதலே விராட்கோலியின் பார்ம் மிகவும் கவலை அளிக்கும் விதமாகவே உள்ளது. உலககோப்பை டி20 மிகவும் அருகில் உள்ள சூழலில் விராட்கோலியின் பேட்டிங் பார்ம் மிகவும் கவலை அளிக்கும் விதத்திலே இருப்பது இந்திய ரசிகர்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் ரோகித்சர்மாவும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில், விராட்கோலியும் மோசமான பேட்டிங் பார்மால் தடுமாறுவது இந்திய அணிக்கு பின்னடைவு ஆகும்.




இங்கிலாந்து போன்ற வலுவான அணியை அவர்களது நாட்டிலே எதிர்கொள்ள உள்ள நிலையில், விராட்கோலி அணியில் இடம்பெறாமல் போனால் அது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவு ஆகும். விராட்கோலி ஆடாவிட்டால் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்க வாய்ப்பு உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண