கடந்த ஐந்தாண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஏமாற்றமான செயல்பாடுகளை ஆகாஷ் சோப்ரா எடுத்துரைத்தார்.


டெஸ்ட் பார்மட்டில் சொதப்பும் கோலி:


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது. மூன்றவது டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொதப்பலான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தினார். அதாவது முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்கள் எடுத்தார்.


அதேபோல், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். இச்சூழலில் தான் விராட் கோலியின் டெஸ்ட் ஃபார்மை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. இது தொடர்பாக அவர் பேசுகையில்,"விராட் கோலியின் டெஸ்ட் ஃபார்ம் கவலைக்குரியதா? கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.


கடந்த 5 ஆண்டுகளில் அவரது எண்ணிக்கையைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது, அது இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தது. அவர் ஆறு இன்னிங்ஸ் மட்டுமே விளையாடினார். 2020 இல் மற்றும் சராசரியாக 19 இருந்தது. அவர் 2021 இல் 19 இன்னிங்ஸ்களை விளையாடினார், ஆனால் அவர் 28 சராசரியாக இருந்தார், எந்த சதமும் இல்லை," என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.


2024 விராட் கோலியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது?


டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. 10 இன்னிங்ஸ்களில் 27.22 என்ற சொற்ப சராசரியில் 245 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார்.


பார்டர்-கவாஸ்கர் டிராபி வரும் நிலையில், கோஹ்லியின் ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் கவலையாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.