கொரோனா அச்சுறுத்தல், ஒமிக்ரானின் ஆரம்பம் என 2021ஆம் ஆண்டு நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. இன்று புத்தாண்டான 2022ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. புத்தாண்டை உலக மக்கள் அனைவரும் நம்பிக்கையுடனும், கொண்டாட்டத்துடனும் வரவேற்றுள்ளனர்.




இந்நிலையில் விராட் கோலி தென் ஆப்பிரிக்காவில் தனது அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணி வீரர்கள் இஷாந்த் ஷர்மா, கே.எல். ராகுல், புஜாரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், சைனி, ரிஷப் பண்ட், பும்ரா சிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 






இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விராட் கோலி, இந்த புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். எங்கள் அன்பையும், நேர்மறை எண்ணங்களையும் உங்களுக்கு அனுப்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். அனுஷ்கா ஷர்மாவும் புத்தாண்டுக்கு கேக் வெட்டும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.


 






முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ICC 2021 Review: ”மறக்க முடியாத கிரிக்கெட் தருணங்கள்” - உணர்ச்சி பொங்க ஐசிசி பகிர்ந்த பதிவு