இந்தியா வங்காளதேச அணிகளுக்கு இடையிலான போட்டி புனேவில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காள அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்துள்ளது. 


இந்த போட்டியின் 9வது ஓவரை இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் மூன்று பந்துகளை மட்டும் வீசிய அவர் காயம் ஏற்பட்டதால் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதாவது, 9வது ஓவரின் மூன்றாவது பந்தினை வீசுகையில் நிலைதடுமாறி கால் இடறி விழுந்தார். இதனால் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. உடனே வந்த மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். அதன் பின்னர் நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்ட ஹர்திக் பாண்டியா மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் 9வது ஓவரில் மீதம் இருந்த மூன்று பந்துகளை விராட் கோலி வீசினார். இதனால் ரசிகர்கள் உற்சாகமாகினர். மூன்று பந்துகளில் விராட் 2 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.