இந்திய கிரிக்கெட் அணியின் பல வீரர்கள் இடம்பிடித்திருந்தாலும் வெகு சிலர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் உலகில் நீண்ட நாட்கள் சாதிப்பார்கள். அப்படி பல ஆண்டுகள் கொடி கட்டி பறந்து வருபவர் நம்முடைய கிங் கோலி தான். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது வரை பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வீரராக இவர் இருந்து வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சில வீரர்கள் க்ளாசாக விளையாடுவார்கள். ஒரு சிலர் தங்களுக்கே உரிய அதிரடி பாணியை கையாளவார்கள். ஆனால் விராட் க்ளாசாகவும் மாஸ் ஆகவும் விளையாடும் திறமை கொண்டவர். கோலியின் லெக் ஃபிளிக் ஷார்ட் எப்போதும் அவருடைய க்ளாசை நமக்கு நினைவுப்படுத்தும். அவருடைய பிறந்தநாளில் அவர் அடித்த சில சிறப்பான தரமான ஷார்ட்களை திரும்பி பார்ப்போம்.
2016: ஃபல்க்னர் பந்தில் சிக்சர்:
2016 ஆம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஜேம்ஸ் ஃபல்க்னர் வீசிய பந்தை விராட் கோலி சிறப்பாக சிக்சர் அடிப்பார். அந்த ஷார்ட் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
2017: கிறிஸ் வோக்ஸ் பந்தில் சிக்சர்:
2017 ஆம் ஆண்டு புனேவில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை விராட் கோலி மிகவும் சிறப்பாக சிக்சர் அடிப்பார். இந்த ஷார்டை அவர் மிகவும் எளிதாகவும் திறமையாகவும் அடிப்பார்.
2019: ரபாடா பந்தில் ஃபிளிக் சிக்சர்:
2019 ஆம் ஆண்டு இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 மொகாலியில் போட்டி நடைபெற்றது. அதில் ரபாடா வீசிய பந்தில் விராட் கோலி சிறப்பான ஃபிளிக் சிக்சர் அடிப்பார். ரபாடா வீசிய வேகமான பந்தை விராட் கோலி சிறப்பாக லெக் திசையில் சிக்சருக்கு அடிப்பார்.
2020: ஏபிடியாக மாறி அடித்த சிக்சர்:
2020 ஆம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஏபிடிவில்லியர்ஸ் போல் சிறப்பாக ஒரு சிக்சர் அடிப்பார். ஆஃப் சைடு வரும் பந்தை லாவகமாக தரையில் முட்டி போட்டு சிக்சருக்கு அடிப்பார். இந்த ஷார்ட் ஏபிடியின் ஷார்ட்டை போல் அமைந்திருந்தது.
2022: ஹாரிஸ் ராஃப் பந்தில் சிக்சர்:
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 19 வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்தை விராட் கோலி லாவகமாக சிக்சர் அடித்தார். இந்த ஷார்ட் அனைவரும் கவர்ந்த ஷார்டாக அமைந்தது.
இவ்வாறு தன்னுடைய 12 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் விராட் கோலி பல்வேறு சிறப்பான ஷார்ட்களை அடித்துள்ளார்.