பார்டர்-கவாஸ்கர் டிராபியின் 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. ஏற்கனவே நடந்த முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


இந்தநிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  4வது மற்றும் கடைசிடெஸ்ட் போட்டியானது நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 


முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 ரன்கள் எடுத்தது. 44 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த ஹெட், அஸ்வின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்சானார். அதன் பிறகு மார்னஸ் லபுசேன் களமிறங்க, அப்போது 2வது ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி, மைதானத்திற்கு சாக்லேட் சாப்பிட்டு கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, மைதானத்தில் இருந்தால் கேமராமேன் கேமராவில் ஏதாவது ஒன்றை செய்து மாட்டிக்கொள்வார். அப்படிதான் நேற்றைய போட்டியிலும் கோலி செய்த செயல் எதார்ச்சையாக வெளியாகி தற்போது ட்ரெண்ட் அடித்து வருகிறது. 






போட்டியின் 23வது ஓவரை முகமது ஷமி வீச வந்தார். அப்போது கிரீஸில் பேட்டிங் செய்ய வந்த மார்னஸ் லபுசேன் தனது இடத்தில் நின்று கொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் ஸ்லிப்பில் இருந்த விராட் கோலி, தனது பாக்கெட்டில் இருந்து சில தின்பண்டங்களை எடுத்து சாப்பிடத் தொடங்கினார், அதை கேமராமேன் தனது கேமராவில் படம் பிடித்தார். அப்புறம் என்ன, சில நிமிடங்களில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவ ஆரம்பித்தது.


உள்ளே வந்த லபுசேன் 3 ரன்களில் வெளியேற, கேப்டன் ஸ்மித்தும் 38 ரன்களில் நடையை கட்டினார். தொடர்ந்து ஹேண்ட்ஸ்காப்பை 17 ரன்களில் ஷமி திருப்பி அனுப்ப, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. 


ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஷமி 2 விக்கெட்களும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்களும் எடுத்துள்ளனர். 


இந்திய அணி விவரம்:
சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத், அக்சார் பட்டேல், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி


ஆஸ்திரேலிய அணி விவரம்:
டிராவிஸ் ஹெட், கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), லாபுஷாக்னே, சி கிரீன், பி ஹேண்ட்ஸ்கோம்ப், ஏ கேரி (விக்கெட் கீப்பர்), ஸ்டார்க்,  மர்பி, லியோன், குஹ்னெமன்.