இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைப்பெற்று வரும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற 340 ரன்கள் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.
ரோகித் சர்மா:
இந்த தொடர் முழுவதும் தொடர்ந்து சொதப்பி வரும் கேப்டன் ரோகித் சர்மா, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில் 3 ரன்கள் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் இந்திய அணிக்கு 340 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய ஃபார்முக்கு திரும்ப இதைவிட ஒரு சிறந்த தருணம் ரோகித் சர்மாவுக்கு கிடைக்காது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
இதையும் படிங்க: IND VS AUS BGT Test: கடைசி நாளில் சரித்திரம் படைக்குமா இந்தியா? ஆஸி., 234 ரன்களுக்கு ஆல்-அவுட் - ரோகித் படையின் இலக்கு?
ஆனால் ரோகித் சர்மா இருங்க பாய் என்று சொல்வார் என்று பார்த்தால், நான் பெவிலியனுக்கு போயிட்டு வரேன் பாய் என்று 9 ரன்களுக்கு பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். இந்த தொடரில் நான்காவது முறையாக பேட் கம்மின்ஸ்சிடம் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. இந்த தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரோகித் மொத்தம் 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரின் சராசரி வெறும் 5.2 மட்டுமே.
விராட் கோலி:
அடுத்ததாக இந்திய அணி மலைப்போல் நம்பிய விராட் கோலி மீண்டும் ஒரு அந்த ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தில் கேட் கொடுத்து ஆட்டமிழந்தார், இந்த தொடரில் ஆறாவது முறையாக ஆஃப் ஸ்டம்ப் பந்தை சேஸ் செய்து அவுட்டானர். இந்த தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி ஒரு சதம் அடித்திருந்தார் அதன் பிறகு ஒரு அரைசதம் கூட இந்த தொடரில் அடிக்கவில்லை. அவர் ஆறு இன்னிங்ஸ்சில் மொத்தம் 67 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். விராட் கோலி மட்டும் ரோகித் சர்மா இந்த தொடரில் சேர்த்து மொத்தம் 98 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
ரசிகர்கள் கொந்தளிப்பு:
இந்த தொடரில் இவர்கள் இருவரின் சொதப்பலான பேட்டிங்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட்டின் கடைசி நாளான இன்று இருவரும் நிச்சயம் அணியை காப்பாற்றுவார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு இரண்டு பேருமே பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததால் எக்ஸ் வலைதளத்தில் ஹாப்பி ரிட்டையர்மெண்ட் என்கிற ஹாஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.