IND VS AUS BGT 4th Test: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்கு
சிறப்பாக விளையாடி வந்த நாதன் லயன், இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூடுதலாக ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து ஏற்கனவே 105 ரன்கள் முன்னிலை வகித்து இருந்த அந்த அணி, இந்தியாவிற்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரில், 2-1 என முன்னிலை பெற முடியும். அதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பையும் நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுமாறும் இந்திய அணி:
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா 40 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 9 ரன்களை மட்டும் சேர்த்து பெவிலியன் திரும்பினார். கே. எல். ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனால், 25 ரன்களை சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து, ஜெய்ஷ்வால் மற்றும் கோலி கூட்டணி நிதானமாக விளையாடி, அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பொறுப்பான ஆட்டம்:
தொடர்ந்து 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஷ்வால் மற்றும் ரிஷப் பண்ட் கூட்டணி பொறுப்பான ஆட்டத்த வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது. நிலைத்து நின்று ஆடிய ஜெய்ஷ்வால் அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார். இதனால், சீரான வேகத்தில் அணியில் ஸ்கோர் உயர்ந்தது.