சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய ஏழாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளது. அவரது கிரிக்கெட் பயணத்தில் புதிய சாதனை இது.
டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி, 2008, ஆக்ஸ்ட் 18-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி விராட் கோலிக்கு 300-வது போட்டி. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 14 பந்தில் 11 ரன் எடுத்து அவுட் ஆனார். மேட் ஹென்றி பந்தில் க்ளென் பிலிப்ஸின் சூப்பர் கேட்ச் பிடித்தார்.
அதிக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் லிஸ்ட்..
- சச்சின் டெண்டுல்கர் - 463 போட்டிகள்
- மகேந்திர சிங் தோனி - 347 போட்டிகள்
- ராகுல் டிராவிட் - 340 போட்டிகள்
- முகமது அசாருதின் - 334 போட்டிகள்
- சவுரவ் கங்குலி - 308 போட்டிகள்
- யுவராஜ் சிங் - 301 போட்டிகள்
- விராட் கோலி - 300 போட்டிகள்*
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் Career
299 போட்டிகள் - 14,085 ரன்கள்
அவரேஜ் - 58.20
ஸ்டைக் ரேட் - 93.41
சதங்கள் - 51
அரை சதங்கள் 50- 73
கிரிக்கெட் விளையாட்டில் டி-20, டெஸ்ட் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்டவற்றில் விளையாடி, அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 18-வது வீரர்கள் லிஸ்டில் விராட் கோலியும் சேர்ந்துள்ளார். டெஸ்ட், டி-20 போட்டிகளோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் விராட் கோலி. ஷாகித் அஃப்டிர்டி, இன்சமாம் உல் அக், ரிக்கி பாண்டிங், வாசிம் அக்ரம், எம்.எஸ்.தோனி, முத்தையா முரளிதரன், ராகுல் டிராவிட், முமமது அசாருதின், ஜாக்கஸ் காலிஸ், ஸ்வீட் வாக், சவுரவ் கங்குலி, தில்சான், சமிண்ட் வாஸ், அரவிந்த டெ சில்வா, யுவராஜ் சிங், ஷான் பொல்லாக், கிறிஸ் கெயில், விராட் கோலி..
விராட் கோலி, அவரது 200-வது போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். அதில் சதம் அடித்து அசத்தினார். அவரது 300-வது போட்டியில் 11 ரன் அடித்து அவுட் ஆகினார்.
மேலும் வாசிக்க..
IND vs NZ: மனுஷனா? ஏலியனா? சூப்பர்மேன் போல பறந்து கேட்ச்! விரக்தியில் விராட் கோலி