சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இருப்பினும், இரு அணிகளுக்கும் நடுவில் இன்று கடைசி லீக் போட்டி நடந்தது. 


அடுத்தடுத்து விக்கெட்டுகள்:


இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் குடைச்சல் கொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்க சுப்மன்கில் 2 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா ஜேமிசன் பந்தில் அவுட்டானார். அவர் 17 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 


சூப்பர்மேனாக மாறிய ப்லிப்ஸ்:






இதன்பின்னர், கடந்த போட்டியில் சதம் அடித்த விராட் கோலி - ஸ்ரேயஸ் ஐயருடன் களமிறங்கினார். கடந்த போட்டியில் சதம் அடித்த விராட் கோலி இந்த போட்டியிலும் சிறப்பாகவே தொடங்கினார். சிறப்பாக 2 பவுண்டரிகளை அடித்த விராட் கோலி மேத் ஹேன்றி பந்தில் பவுண்டரி நோக்கி அடித்த பந்தை, சூப்பர்மேன் போல அந்தரத்தில் பறந்து கிளென் பிலிப்ஸ் கேட்ச் பிடித்தார். 


இதனால், விராட் கோலி மட்டுமின்றி போட்டியைப் பார்த்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனென்றால், கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் மிகவும் அசாத்தியமான கேட்ச் ஆகும். இதுதவிர, விராட் கோலிக்கு இது 300வது ஒருநாள் போட்டி ஆகும். கடந்த போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி இந்த போட்டியிலும் அசத்துவார் என்ற ரசிகர்கள் ப்லிப்ஸின் இந்த கேட்ச்சால் அதிர்ச்சி அடைந்தனர். 


0.62 விநாடிகள்:


உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக கிளென் பிலிப்ஸ் உலா வருகிறார். கிளென் பிலிப்ஸ் இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்காக பல அசர வைக்கும் கேட்ச்களை பிடித்து வருகிறார். அதில் தற்போது விராட் கோலிக்கு பிடித்த கேட்ச்சும் அடங்கியுள்ளது. இந்த கேட்ச்சை கிளென் ப்லிப்ஸ் வெறும் 0.62 விநாடிகளில் பிடித்துள்ளார்.


தடுமாறும் இந்தியா:


30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்காக ஸ்ரேயஸ் ஐயர் - அக்ஷர் படேல் ஜோடி ஆடி வருகிறது. இந்திய அணியின் பின்வரிசையில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா மட்டுமே பேட்டிங்கிற்காக வெளியில் உள்ளனர். இந்திய அணி 15 ஓவர்களுக்கே 46 ரன்கள் மட்டும்தான் எடுத்துள்ளனர். 


நியூசிலாந்து அணிக்காக மேத் ஹென்றி, ஜேமிசன், வில்லியம் ஓரோர்க்கி, கேப்டன் சான்ட்னர் பந்துவீசி வருகின்றனர். மேலும், ரவீந்திரா, ப்ரேஸ்வெல் ஆகியோரும் பந்துவீச வாய்ப்பு உள்ளது. 


இந்திய அணியில் இன்று ரோகித் சர்மா தலைமையில் சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


நியூசிலாந்து அணியில் கேப்டன் சான்ட்னர் தலைமையில் வில் யங், ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், ப்லிப்ஸ், ப்ராஸ்வெல், ஹென்றி, ஜேமிசன், வில்லியம் ஓரோர்கி இடம்பிடித்துள்ளனர்.