இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாகியவர் விராட்கோலி. இவர் நாளை தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். சர்வதேச அளவில் 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உள்ள 12வது இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை விராட்கோலி படைக்க உள்ளார்.


இந்த நிலையில், விராட்கோலி பி.சி.சி.ஐ.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது, “உண்மையில் சொல்கிறேன் நான் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் என்று நினைத்ததே இல்லை. இது ஒரு நீண்ட பயணம். இந்த 100 டெஸ்ட் போட்டிகளில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிந்தததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.




கடவுள் கருணை காட்டுகிறார். எனது உடற்தகுதிக்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், எனது பயிற்சியாளருக்கும் இது ஒரு மிகப்பெரிய தருணம். இது மிகவும் சிறப்பான தருணம். நான் ஒருபோதும் சிறிய ரன்களை எடுக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்றே நினைத்துள்ளேன். ஜூனியர் கிரிக்கெட்டில் பெரிய இரட்டை சதங்களை அடித்துள்ளேன். முதல்தர கிரிக்கெட்டில் 7 அல்லது 8 இரட்டை சதங்களை அடித்துள்ளேன் என்று நினைக்கிறேன்.






 என்னால் முடிந்த வரை பேட் செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. அதை செய்து மகிழ்ந்தேன். இந்த விஷயங்கள் உங்களிடமிருந்து நிறைய எடுத்துக்கொண்டது. அது உங்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட் உயிருடன் இருக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் இதை அனுபவிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் உண்மையான கிரிக்கெட். “


இவ்வாறு அவர் கூறினார்.




விராட்கோலி சர்வதேச அளவில் எந்த ஒரு சாம்பியன் டிராபியை வெல்லாவிட்டாலும், இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த கேப்டனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண