ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகின்றன.
மெகா ஏலத்தின் இரண்டு சுற்றிலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா விலை போகவில்லை. இது ரெய்னா ரசிகர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
இந்தநிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பயோபபுள் தொடர்ந்து நீடிக்க விருப்பமில்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். குஜராத் அணி இவரை ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு எடுத்தது. அவர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து, இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை எடுக்க வேண்டும் என்று இந்திய மற்றும் சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
'மிஸ்டர்' என்ற பெயரால் அழைக்கப்படும் ரெய்னா, 2020 சீசனைத் தவிர, போட்டியின் தொடக்கத்திலிருந்து அனைத்து சீசனிலும் பங்கேற்றார். தொடர்ந்து நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேட்ச் பிக்ஸ் குற்றச்சாட்டின் பேரில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டபோது, தற்போது செயல்படாத குஜராத் லயன்ஸ் (GL) அணியையும் ரெய்னா வழிநடத்தியுள்ளார்.
இந்தநிலையில், மீண்டும் ரெய்னா ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று நம்பிக்கை தர வேண்டாம் என்றும் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
35 வயதான சுரேஷ் ரெய்னா இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் 5000 ரன்களுக்கு மேல் எடுத்த ஆறு வீரர்களில் ஒருவர். 205 ஐபிஎல் போட்டிகளில் 5528 ரன்களுடன், ரெய்னா தற்போது வரை அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இதற்கிடையில், டைட்டன்ஸ் இன்னும் ராயின் மாற்று வீரரை அறிவிக்கவில்லை.
இந்த ஆண்டுக்கான போட்டிகள் மும்பையில் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்த 2022 தொடரில் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. மும்பை, பூனேவில் உள்ள 4 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்