இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. மொகாலியில் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டி விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்த விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டிக்கு நேரில் சென்று மைதானத்தில் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்ய ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தியை அறிவித்திருக்கிறது.


இது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விராட் கோலி விளையாட இருக்கும் 100வது டெஸ்ட் போட்டிக்கு எந்த தடையும் இல்லை. அரசு அறிவித்திருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கலாம்” என தெரிவித்திருக்கிறார். 






முன்னதாக, பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷனின் முக்கிய நிர்வாகி ஆர்.பி. சிங்களா மொகாலி டெஸ்ட் போட்டி ரசிகர்கள் கூட்டமின்றி நடத்தப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ள இந்த போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா, மாயங்க் அகர்வால், பிரியங்க் பன்சல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே.எஸ்.பாரத், அஷ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண