இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 4-ந் தேதி நடைபெற உள்ளது. மொகாலியில் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டி இந்திய கேப்டன் விராட்கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்த விராட்கோலியின் 100வது டெஸ்ட் போட்டிக்கு நேரில் சென்று மைதானத்தில் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்ய ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்கு இல்லை என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.




இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ நீங்கள் எந்த விளையாட்டு விளையாடினாலும் அங்கே கூட்டம் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இந்தியா ரசிகர்கள் கூட்டமின்றி சமீபகாலமாக விளையாடி வருகிறது. ஒரு நடிகர், ஒரு கிரிக்கெட்டர் என யாராக இருந்தாலும் தாங்கள் ரசிகர்களின் முன்பு விளையாட ஆசைப்படுவார்கள். 100வது டெஸ்ட் போட்டி என்பது மிகமிக சிறப்பு வாய்ந்தது ஆகும்.


ஆனால், அங்கே ரசிகர்கள் கூட்டம் இல்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஆனால், இந்த முடிவு அதிக நலனுக்காக எடுக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். மொகாலியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷனின் முக்கிய நிர்வாகி ஆர்.பி. சிங்களா மொகாலி டெஸ்ட் போட்டி ரசிகர்கள் கூட்டமின்றி நடத்தப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ள இந்த போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க : Watch Video | பாசக்காரப்பய..! கேமராமேனுக்கு காஃபி வேணுமா என்ற ரோகித்! ஹிட்மேனின் வைரல் வீடியோ!!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண