இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. அதிரடி பேட்ஸ்மேனான வினோத் காம்ப்ளி பிரபல கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கரின் பள்ளி காலம் முதல் நண்பர். இவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பையில் உள்ள பாந்தரா பகுதியில் உள்ள ஜூவல் குடியிருப்பில் வசித்து வருகிறார்.


இந்த நிலையில், ஞாயிறுக்கிழமையான நேற்று மதுபோதையில் வினோத் காம்ப்ளி இருந்துள்ளார். பின்னர், அவர் தனது காரை குடியிருப்பின் பார்க்கிங்கில் இருந்து எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அவரது கார் அருகில் இருந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அவரது கார் மோதிய கார் இந்திய அணியின் மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமேஷ்பவாரின் மனைவி தேஜஸ்வினிக்கு சொந்தமானது ஆகும்.




இதையடுத்து, குடியிருப்பில் இருப்பவர்களுக்கும் வினோத் காம்ப்ளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் வினோத் காம்ப்ளி குடியிருப்பில் இருப்பவர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வினோத்காம்ப்ளி மீது பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


மேலும் படிக்க : ’உன் முகத்துல பருக்கள் இருக்கு.. புது வீடு கொடுத்தா வாழுவேன்..’ : நிர்வாண படத்தை வைத்து மிரட்டிய கணவன் கைது.. என்ன நடந்தது?


புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினோத் காம்ப்ளியை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மதுபோதையில் காரை விபத்திற்குள்ளாக்கியதால் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




50 வயதான வினோத் காம்ப்ளி இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1084 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 4 சதம், 2 இரட்டை சதம், 3 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 227 ரன்களை குவித்துள்ளார். 104 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 477 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 2 சதம், 14 அரைசதங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 106 ரன்கள் எடுத்துள்ளார்.   


மேலும் படிக்க : ஃபாக்ஸ் ஆபிஸில் பந்தி போடும் வலிமை... இந்திய அளவில் வசூல் வேட்டை நடத்தும் படங்களின் விபரம் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண