இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலி. ஆசியக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறி விட்டதால் இன்றைய போட்டியில் முன்னணி வீரர்களான விராட்கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


விராட்கோலி களத்தில் எந்தளவு ஆக்ரோஷமாக உள்ளாரோ, அதே அளவு வேடிக்கைகளும், விளையாட்டுகளும் நிறைந்த நபர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை நிரூபிக்கும் விதமாக களத்தில் பல முறை அவர் நடந்துகொண்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.


விராட்கோலியின் சேட்டை:


இந்த நிலையில், இன்று இந்திய அணியினர் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது விராட்கோலி வீரர்களுக்கு தண்ணீர், குளிர்பானங்களை சுமந்து வந்தார். அப்போது, வழக்கம்போல தனது விளையாட்டுத் தனத்துடன் குரங்கு போல ஓடி வந்தார். அவருக்கு பின்னால்  முகமது சிராஜ் தண்ணீர் கேனை சுமந்து ஓடி வந்தார். இந்த வீடியோ தற்பேது இணையத்தில் வைரலாகி வருகிறது. களத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோலியின் ஒவ்வொரு செயலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.






நாளை மறுநாள் இறுதிப்போட்டி:


களத்தில் எப்போதும் மிகவும் ஜாலியாக இருக்கம் விராட்கோலி வீரர்களை ஊக்குவிப்பதுடன், களத்திலே நடனம் ஆடவும் செய்தார். விராட்கோலியின் ஆக்ரோஷமும், அவரது சேட்டைகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.  ஏற்கனவே, இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது விராட்கோலி களத்தில் நடனம் ஆடிக்கொண்டிருந்த வீடியோ வைரலாகிறது. இன்று போட்டி நடக்கும் கொழும்பு மைதானத்திலே நாளை மறுநாள் இந்தியா – இலங்கை அணி இறுதிப்போட்டியில் மோத உள்ளது.


இந்த ஆசிய கோப்பைத் தொடரில் விராட்கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசததியதுடன் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையும் படைத்தார். மேலும், இறுதிப்போட்டி நடக்க உள்ள இந்த கொழும்பு மைதானத்தில் விராட்கோலி கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக விராட்கோலி, ரோகித்சர்மா, சுப்மன்கில், ராகுல் என இந்தியாவின் முன்னணி வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: SL vs PAK: கடைசி வரை திக்.. திக்..! கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி... போராடி தோற்றது பாகிஸ்தான்..!


மேலும்படிக்க: IND vs BAN: சம்பிரதாய ஆட்டத்தில் மோதும் இந்தியா - வங்கதேசம் அணிகள்.. ஆனாலும் காத்திருக்கும் சாதனை..!