அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் தங்கள் மகள் வாமிகாவுடன் விடுமுறைக்கு உத்தரகாண்ட் சென்றுள்ளது சமீபத்தில் ரசிகர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. சமீபத்தில், இணையத்தில் ரசிகர்கள் பல படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் அவர்கள் தங்கள் ரசிகர்களுடன் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுப்பதைக் காண முடிகிறது.
உத்தரகாண்ட்டில் கோலி-அனுஷ்கா தம்பதி
காக்ரிகாட், நீம் கரோலி பாபா கோவிலுக்கு வெளியே விராட் மற்றும் அனுஷ்காவுடன் போஸ் கொடுக்கும் படத்தை ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளதால், மூவரும் குடும்பத்துடன் உத்தரகாண்டில் விடுமுறையை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது. அந்த ரசிகர் இட்ட பதிவில் "நான் இங்கே காக்ரிகாட், நீம் கரோலி பாபா கோவிலில் கோலியும் மற்றும் அனுஷ்காவுடன் உடன் அமர்ந்து, நீம் கரோலியின் அமைதி மற்றும் நிபந்தனையற்ற அன்பை உணருகிறேன். பாபா," என்று எழுதியுள்ளார்.
அனுபம் கெர்
இந்த வார தொடக்கத்தில், அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி மும்பை விமான நிலையத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்தனர். அதே நாளில், அனுபம் கெர் விமான நிலைய ஓய்வறையில் இவர்கள் இருவரையும் கண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் தம்பதியருடன் ஒரு படத்தைப் பகிர்ந்த அவர், "விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவை விமான நிலைய லாஞ்சில் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்! அவர்களுக்கு ஜெய் ஹோ!" என்று எழுதி இருந்தார்.
அனுஷ்கா ஷர்மா
படத்தில், அனுஷ்கா மற்றும் விராட் வெள்ளை ஸ்வெட்ஷர்ட்களில் உள்ளனர், அதே நேரத்தில் அனுபம் கெர் வெள்ளை சட்டை மற்றும் ஜீன்ஸில் காணப்படுகிறார். இதற்கிடையில், அனுஷ்கா ஷர்மா அடுத்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜுலான் கோஸ்வாமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சக்தா எக்ஸ்பிரஸ் என்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு Netflixல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி
விராட் கோலி இந்திய அணிக்கு கோப்பையை வெல்லாத அதிருப்தி இருந்தாலும், தான் திரும்பவும் ஃபார்முக்கு திரும்பிய நிம்மதியில் இருக்கிறார். நியூசிலாந்து தொடருக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கும் இந்த இடைவெளியில் உத்தரகாண்ட்டில் தனது குடும்பத்துடன் நேரத்தை கழித்து வருகிறார்.