Mitchell Starc: டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரில் களமிறக்கப்படாததால் விரக்தியில் இருந்த மிட்செல் ஸ்டார்க், தற்போது மனம் திறந்துள்ளார். 


ஆஸ்திரேலிய அணியின் இடக்கை அதிவேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவர் டி20 உலகக் கோப்பையில் தான் களமிறக்கப்படாமல் இருந்ததால் விரக்தியில் இருந்தார். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர் நடக்கும் போட்டி என்பதால் மிகவும் கவனம் பெற்றுள்ளது. மொத்தம் மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி என இந்த பயணம் திட்டமிடப்பட்டது. 


இதில் ஏற்கனவே முடிந்த டி20 போட்டிகளில் உலகச் சாம்பியன் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. 


இந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், முதல் போட்டியில் ஒரு விக்கெட்டும், இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார். குறிப்பாக இரண்டாவது போட்யில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற முக்கிய காராணமாக இருந்தவர் ஸ்டார்க் தான். 






ஆனால் அவர் டி20 உலகக் கோப்பையில் அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் முக்கியப் போட்டியான ஆஃப்கானிஸ்தானுடனான போட்டியில் களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தாலும், அரையிறுதிக்கு முன்னோறுவதற்கான ரன்ரேட் இல்லாததால், தொடரில் இருந்து வெளியேறியது.  இதற்கு பலரும் மிட்செல் ஸ்டார்க்கை களம் இறக்காத்து முக்கிய காரணம் என விமர்சித்து வந்தனர். 


இந்த விவகாரம் குறித்து மனம் திறந்துள்ள மிட்செல், எனக்கு 2024 டி20 உலகக் கோப்பையிலும் விளையாடும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்காக நான் என்னை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். உலகக் கோப்பையில் நடந்த சம்பவம் குறித்து பயிற்சியாளரிடம் பேசினேன். அது எங்களுக்கு உள்ளேயே இருக்கும். மேலும், எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தான் மிகவும் ஆசையாக இருக்கிறது. நானும் அதைத் தான் விரும்புகிறேன். அதற்குப் பின்னர் தான் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் எல்லாம். மேலும், முத்தரப்பு போட்டிகளில் விளையாடுவது என்பது சவாலானது மற்றும் அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என நான் நம்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் முடிந்த வரை தொடர்ந்து விளையாடுவேன் எனச் சொன்ன மிட்செல் ஸ்டார்க்குக்கு 32 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.