உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் விஜய் சங்கர், ஹரிதிக் பாண்டியாவின் ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
சையது முஷ்டாக் அலி கோப்பை:
இந்தியாவில் ஆண்டுதோறும் முன்று வகையான உள்ளூர் போட்டிகள், அதில் ஒன்று தான் சையது முஷ்டாக் அலி கோப்பை. ரஞ்சி கோப்பையின் முதல் பகுதி தற்போது முடிந்துள்ள நிலையில், தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பைக்கானதொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பி பிரிவில் தமிழக அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் திரிப்புரா மற்றும் சிக்கிம் அணிகளை வென்று அசத்தி இருந்தது.
விஜய் சங்கர் வெறியாட்டம்:
இன்று பரோடா அணியுடன் தங்களது மூன்றாவது லீக் போட்டியில் தமிழக அணி விளையாடியது. இந்த போட்டியில் தமிழக அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 குவித்தது. இந்த போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.2 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார் விஜய் சங்கர்.
அவரை சென்னை அணி ஏலத்தில் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர் இந்த நிலையில் தான் சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடி அந்த விமர்சனங்களுக்கு தனது பேட்டின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.
ஹூடா, ஸ்ரேயஸ் கோபல் அசத்தல்:
இன்னொரு பக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட தீபக் ஹூடா ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு பக்கம் சென்னை அணி ஸ்ரேயஸ் கோபால் செளராஷ்ட்ரா அணிக்கு எதிரான போட்டியில் 22 ரன்களுக்கு 36 ரன்கள் எடுத்து மிரட்டி இருந்தார்.
சிஎஸ்கே அணி நல்ல பினிஷ்சரை எடுக்கவில்லை என்று பலரும் கூறி வந்த நிலையில் தற்போது அந்த குறை சிஎஸ்கே அணிக்கு கிடையாது என்று சொல்லும் அளவிற்கு தங்களது ஆட்டத்தின் மூலம் பதில் தந்துள்ளனர்.