இந்தூரில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் சர்வதேச பள்ளி மைதானத்தில் புதன்கிழமை திரிபுராவுக்கு எதிரான சையது முஷ்டாக் அலி கோப்பையில் குஜராத்தின் உர்வில் படேல் 28 பந்துகளில் சதம் அடித்து விளாசினார் .
அதிவேக சதம்:
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்.பை நடந்த போட்டியில் குஜராத் வீரர் உர்வில் பட்டேல் 28 பந்துகளில் சதம் அடித்தார். இதன் உலக டி20 போட்டி வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் உர்வில் பட்டேல்.
சைப்ரஸுக்கு எதிராக வெறும் 27 பந்துகளில் சதம் அடித்த எஸ்டோனியாவின் சாஹில் சௌஹான் அடித்திருந்தார். ஆனால் உர்வில் பட்டேல் ஒரே பந்தில் அந்த சாதனையை சமன் செய்ய தவறிவிட்டார். இதன் மூலம் ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும். மேலும் இதற்கு முன்னால் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 33 பந்துகளில் அதிவேக சதம் அடித்திருந்தார். அந்த சாதனையை தற்போது உர்வில் பட்டேல் முறியடித்துள்ளார்.
26 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டரான இவர் குஜராத் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட்ட 156 ரன் இலக்கை 7 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் அடித்து, தனது முதல் டி20 சதத்தை எட்டினார். அவர் 35 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார், குஜராத் அணி 10.2 ஓவர்களில் சேஸிங்கை முடித்தது.
இதையும் படிங்க: Vijay Shankar Watch Video : அடி மேல் அடி.. சிக்கிய பாண்டியா! நொறுக்கி தள்ளிய விஜய் சங்கர்
கண்டுக்காத அணிகள்:
சில நாட்களுக்கு முன், இந்தியன் பிரீமியர் லீக்கின் மெகா ஏலத்தில் வீரர்கள் ஏலத்தில் உர்வில் விற்கப்படாமல் போனார். இந்த ஏலத்தில் அவர் அடிப்படை விலையாக 30 லட்சத்தை நிர்ணயித்தார். ஆனால் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. 2023 ஏலத்தில் அவரை ரூ.20 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ஏலம் போகாத நிலையில் இப்படி ஒரு இன்னிங்ஸ் கொடுத்து ஐபிஎல் அணிகளுக்கு தனது மட்டையின் மூலம் பதில் கொடுத்துள்ளார் உர்வில் பட்டேல்
வேகமான டி20 சதம்
- சாஹில் சவுகான் (எஸ்டோனியா) 27 பந்துகளில் சைப்ரஸுக்கு எதிராக அடித்தார் (2024)
- உர்வில் படேல் (குஜராத்) 28 பந்துகளில் திரிபுராவுக்கு எதிராக அடித்தார் (2024)
- கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) 30 பந்துகளில் புனே வாரியர்ஸுக்கு எதிராக அடித்தார் (2013)
- ரிஷப் பண்ட் (டெல்லி) 32 பந்துகளில் ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிராக அடித்தார் (2018)
- விஹான் லுபே (வடமேற்கு) 33 பந்துகளில் லிம்போபோவுக்கு எதிராக அடித்தார் (2018)