லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் படைத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழக அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாராயண் ஜெகதீசன்தான்.
விஜய் ஹசாரே டிராபில் எலைட் குரூப் சி போட்டியின் 6வது சுற்றில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் குவித்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ மற்றும் சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை ஜெகதீசன் படைத்துள்ளார்.
அதிகபட்ச தனிநபர் லிஸ்ட் ஏ மற்றும் சர்வதேச ஸ்கோர்:
- 277 - என் ஜெகதீசன் (TN) v அருணாசலம், இன்று
- 268 - அலிஸ்டர் பிரவுன் (சர்ரே) எதிராக கிளாமோர்கன், 2002
- 264 - ரோஹித் சர்மா (இந்தியா) எதிராக இலங்கை, 2014
- 257 - டி'ஆர்சி ஷார்ட் (மேற்கு ஆஸி) எதிராக குயின்ஸ்லாந்து, 2018
- 248 - ஷிகர் தவான் (இந்தியா ஏ) எதிராக தென்னாப்பிரிக்கா ஏ, 2013
பல சாதனைகளை தன்வசமாக்கிய ஜெகதீசன்:
லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் படைத்துள்ளார். இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார, தென்னாப்பிரிக்காவின் அல்விரோ பீட்டர்சன் மற்றும் கர்நாடக தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் இதற்கு முன்னதாக 50 ஓவர் வடிவத்தில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்துள்ளனர்.
விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்ற ஒரே ஆண்டியில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் இருந்த விராட் கோலி, பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரையும் கடந்தார் ஜெகதீசன். கோலி 2008-09 சீசனில் நான்கு சதங்களை அடித்தார். 7 போட்டிகளில் விளையாடிய கோலி 89 சராசரியுடன் 534 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் ஏற்கனவே தனது 6வது போட்டியில் 799 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே ஆண்டில் விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள்:
- ஜெகதீசன் - 5*
- விராட் கோலி, பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் - 4
விஜய் ஹசாரே போட்டி வரலாற்றில் இரட்டை சதம் அடித்த ஆறாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ஜெகதீசன் பெற்றுள்ளார்.
1 | கர்ண் வீர் கௌஷல் | உத்தரகாண்ட் vs சிக்கிம் | 6th Oct 2018 | 202(135) |
2 | சஞ்சு சாம்சன் | கேரளா vs கோவா | 12th Oct 2019 | 212(129)* |
3 | யஷஸ்வி ஜெய்ஸ்வால் | மும்பை vs ஜார்கண்ட் | 16th Oct 2019 | 203(154) |
4 | பிருத்வி ஷா | மும்பை vs புதுச்சேரி | 25th Feb 2021 | 227(152)* |
5 | சமர்த் வியாஸ் | சௌராஷ்டிரா vs மணிப்பூர் | 13th Feb 2023 | 200(131) |
6 | ஜெகதீசன் | தமிழ்நாடு vs அருணாச்சலம் | 21th Feb 2023 | 277(141) |