இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நேற்று கைப்பற்றியது. பெங்களூருவில் நடைபெற்று வந்த பகலிரவு போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.


இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீசும் போது கேப்டன் ரோகித் சர்மா செய்த செயல் தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்  பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 24ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். அந்த ஓவரில் ஒரு எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்க கேப்டன் ரோகித் சர்மா ரிவ்யூ கேட்பது போல் வந்து பின்னர் அதை மாற்றிவிட்டார். அவரின் இந்தச் செயல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை கடும் சிரிப்பில் ஆழ்த்தியது. 






இந்த விவகாரம் தொடர்பான வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்திய மண்ணில் இந்திய அணி கடைசியாக 2012-13ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் தொடரை இழந்து தோல்வி அடைந்திருந்தது. இதற்கு பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வி என்பதையே சந்தித்தது கிடையாது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ள நிலையில், உள்நாட்டில் 15வது டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்து இந்திய அணி அசத்தி இருக்கிறது.


அத்துடன் தொடர்ச்சியாக இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் 15 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அத்துடன் கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனையை முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியின் போது ரோகித் சர்மா படைத்திருந்தார். 1952ஆம் ஆண்டு பாலி உம்ரிகருக்கு பிறகு ரோகித் சர்மா மட்டும் தான் கேப்டனாக செயல்பட்ட முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:ரிஷப்பண்ட் 40 நிமிடங்களில் ஆட்டத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர் - ரோகித்சர்மா புகழாரம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண