Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபி: “புற்கள் வளர லேட்டாகும்” - மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூருக்கு மாற்றம்!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெறாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Continues below advertisement

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணத்தின் மூன்றாவது டெஸ்ட், முதலில் மார்ச் 1  முதல் 5 ஆம் தேதி வரை தர்மசாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்தது.  இப்போது இப்போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

தர்மசாலாவில் கடுமையான குளிர்காலம் நிலவுவதாலும் அவுட்ஃபீல்டில் போதுமான அளவு அடர்த்தியாக புல் இல்லை. புற்கள்  முழுமையாக வளர்ச்சியடைய போட்டி குறிப்பிட்ட தேதியைவிடவும் காலம் தேவைப்படும் என்பதால் போட்டி இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அபார சதம் மற்றும் ஜடேஜா, அக்சர் படேலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 400 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

சீட்டுக்கட்டாய் சரிந்த ஆஸ்திரேலியா:

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. குறிப்பாக, தமிழக வீரர் அஸ்வின் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கவாஜா, வார்னர் என 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுக்கும் 31வது 5-விக்கெட்டுகள் இதுவாகும். அவருக்கு பக்க பலமாக ஜடேஜா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டை வீழ்தினார்.

இன்னிங்ஸ் வெற்றி: 

இதனால் அந்த அணி, 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 25 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Continues below advertisement