IND vs PAK, WT20: டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7  விக்கெட்டுகள் வித்தியாசத்தில்வீழ்த்தி  இந்திய அணி  வெற்றி பெற்றுள்ளது.  19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. குறிப்பாக இந்திய அணியி ஜெமிமா 38 பந்தில் 8 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார். இவருக்கு ப்ளையர் ஆஃப் த மேட்ச் கொடுக்கப்பட்டது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்க் தேர்வு செய்தது. இதனால் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில்  பிஸ்மா மாரூஃப்  55பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 68 ரன்கள் எடுத்தார். அதேபோல், அயிஷா அதிரடியாக விளையாடி, 25பந்துகளில் 2பவுண்டரி மற்றும் 2சிஸ்சர் உள்பட 43 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரும் இணைந்து 47 பந்துகளில் 81 ரன்கள் விளாசினர்.  


இந்திய அணியின் சார்பில், ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். போட்டியின் 16வது ஓவரை வீசிய ரேனுகா தக்கூர், அந்த ஓவரில் 3 வைய்டு பந்துகளை வீசினார். இதனால் மொத்தம் 9 பந்துகள் வீசினார். மேலும், அந்த ஓவரில் பாகிஸ்தான் அணி 18 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து களமிறங்கவுள்ள இந்திய அணி 150 ரன்களை எட்டிப் பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.  இந்நிலையில், இந்திய அணி இலக்கை எட்டிப்பிடிக்கும் நம்பிக்கையில் களமிறங்கியது. 


மந்தனா இல்லை


இந்திய அணியின் பேட்டர் ஸ்ருதி மந்தனா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 










அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் அவசரப்படாமல், நிதானமாக விளையாடினர். குறிப்பாக கிடைத்த பந்தினை பவுண்டரிக்கு விளாசினர். இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய அனைத்து வீராங்கனைகளும் பவுண்டரிகளை அடித்தனர். குறிப்பாக போட்டியின் 18 ஓவரின் முதல் மூன்று பந்தில் இந்திய அணியின் ரிச்சி கோஷ் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார். 


 


இந்தியா வெற்றி


சீரான இடைவளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், இந்திய அணி  போட்டியில் பரபரப்பைக் கூட்டியது. 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. குறிப்பாக இந்திய அணியி ஜெமிமா 38 பந்தில் 8 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார். இவருக்கு ப்ளையர் ஆஃப் த மேட்ச் கொடுக்கப்பட்டது.