வாழ்க்கை ஒரு வட்டம் டா என்று நடிகர் விஜயின் திருமலை படத்தில் ஒரு பிரபலமான வசனம் ஒன்று உண்டு. அந்த வகையில் தனது கிரிக்கெட் கேரியர் முடிந்தது என்று நினைத்த அதே இடத்தில் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி. 

Continues below advertisement


இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தமிழக வீரர் வருண் சக்க்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். 


டென்னிஸ் பால் கிரிக்கெட்:


ஒன்பது வருடங்களுக்கு முன்பு, ஒரு கட்டுமான நிறுவனத்தில் கட்டிடக் கலைஞராகப் பணிபுரிந்த வருண் , தனது முதல் காதலான கிரிக்கெட்டுக்கு நேர்மையாக இருந்தாரா என்று தன்னைத்தானே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு பதில் "இல்லை". ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை மீண்டும் நிறைவேற்றுவது என்று அவர் அங்கேயே முடிவு செய்தார். புதிதாகத் தொடங்கி தனது இறுதி இலக்கை அடையத் தீர்மானித்த வருண் தான் வேலையை விட்டு விலகப் போவதாக தனது முதலாளிகளிடம் தெரிவித்தார். 


காயத்தால் ஸ்பின்னரான வருண்:


பள்ளி நாட்களில் வேகப்பந்து வீச்சாளராகவும் விக்கெட் கீப்பராகவும் பணியாற்றி, ஐந்து ஆண்டுகள் கட்டிடக்கலை பயின்றார், இரண்டு ஆண்டுகள் தொழில்முறை கட்டிடக் கலைஞராக இருந்தார், சில காயங்கள் ஏற்பட்ட பிறகு, வருண் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார்: சுழற்பந்து வீச்சுதான் தொழில்முறை கிரிக்கெட் உலகிற்கு அவருக்கு ஒரு டிக்கெட்டாக இருக்கும் என்று முடிவெடுத்தார்.


இடைவிடாத கடின உழைப்பு மற்றும் சரியான நேரத்தில் சரியான நபர்களின் ஆதரவுடன், அவர் ஒரு காலத்தில் கனவு கண்ட நோக்கி வேகமாக  உயர்ந்தார். 2016-ல் ஆண்டுக்களில், ஒரு டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரரிடமிருந்து ஒரு தொழில்முறை வீரராக அவர் மாறத் தொடங்கினார்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு  நெட் பவுலராக பணியாற்றிய பிறகு, 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸுடன் ரூ.8.4 கோடி ஒப்பந்தத்தைப் பெற்றார்.


மாற்றம் கொடுத்த ஐபிஎல்:


2019 ஐபிஎல்லில், வருண் சக்ரவர்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார், பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை வாங்கியது. கொல்கத்தா அணிக்காக தனது முதல் சீசனில், அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது மர்மமான சுழல்பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மென்களுக்கு தலைவலியை கொடுத்தது. ஐபிஎல் 2021க்கு பின்னர் வருணுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 


2021 உலகக்கோப்பை அணியில் வருண்:


தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வருண் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வருண் இடம் பெற்றார்.


ராகுல் சாஹர் மற்றும் ஆர். அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை விட அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவுக்கு பலனளிக்கவில்லை. துபாயில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, அதன் பின்னர் நடந்து நியூசிலாந்து அணியுடன் ஏற்ப்பட்ட தோல்வியினால் இந்திய அணி உலகக்கோப்பையில் இருந்து குரூப் சுற்றிலேயே வெளியேறியது. அந்த டி20 உலகக் கோப்பையில் வருண் மூன்று போட்டிகளில் விளையாடினார், ஆனால் வெறுங்கையுடன் வீடு திரும்பினார். அத்துடன் வருணின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என்று பலரும் நினைத்தனர்


கம்பேக் கொடுக்க போராடிய வருண்:


அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடவில்லை.  ஆனால் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு வெறி வருணிடம் இருந்தது. அவருக்குத் தேவையான அனைத்து உதவியும் ஆதரவை, KKR அணி அவருக்கு கொடுத்தது


"சில நேரங்களில் வாழ்க்கை உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பைத் தரும்" என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது நடக்குமா? அல்லது நமது விதியை நாமே தீர்மானிக்க வேண்டுமா? வருணின் விஷயத்தில், அவர் இரண்டாவது வாய்ப்பை நோக்கி தனது பாதையை அமைத்துக் கொண்டிருந்தார், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்திருந்தார்.


2024-ல் கம்பேக்:


தனது முழு உழைப்பையும் போட்டு போராடிய வருணுக்கு 2024 ஐபிஎல்  தொடர் நல்ல மாற்றத்தை கொடுத்தது, தனது பந்து வீச்சும் முறை, வேகம் என அனைத்தையும் மாறுப்படுத்தினார் வருண் சக்கர்வர்த்தி. அது அவருக்கு நல்ல பயனையும் கொடுத்தது. இதனால் அவர் இந்திய டி20 அணியிலும் இடம் பெற்று பந்து வீச்சில் அசத்தியும் காட்டினார். 


இதனால் வருணை சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது, முதல் 15 நபர்கள் கொண்ட இந்திய அணியில் வருணின் பெயர் இடம் பெறவில்லை. இதன் பின்னர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயமடைந்த உடன் அவருக்கு பதிலாக வருண்  சேர்க்கப்பட்டார். 


புதிய பயணத்தை தொடங்கிய வருண்:


முதல் இரண்டு போட்டிகளில் வருண்  விளையாடமல் இருந்தாலும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கி தனது அசத்தல் பந்து வீச்சு 5 விக்கெட்டுகளையும் எடுத்தார். தான் களமிறங்கிய முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த மூன்றாவது இந்தியர் என்கிற சாதனையும் வருண் பெற்றார். ‘


எந்த துபாய் மைதானத்தில் வருணின் கிரிக்கெட் கேரியர் முடிந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் அதே துபாய் மைதானத்தில் தனது கிரிக்கெட் கேரியரின் புதிய பயணத்தை வருண் சக்கரவர்த்தி  மாற்றி எழுதி தொடங்கியுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.