கிரிக்கெட் போட்டிகளின்போது சில வீடியோக்கள் வைரலவாது வழக்கம். அந்த வரிசையில், புதிதாக டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக இன்று அறிமுகமாகி இருக்கும் கே.எல் ராகுலின் வீடியோதான் இன்றைய போட்டியின் ஹைலைட். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து சொதப்பி கொண்டிருந்த இந்திய அணியை அரை சதம் கடந்து மீட்டார் கேப்டன் ராகுல். முதல் இன்னிங்ஸில், ரபாடா வீசிய பந்தை எடுக்காமல் பின் வாங்கிய ராகுல், உடனே நடுவரிடம் ‘மன்னிப்பு’ கேட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 


ஜோஹனஸ்பெர்க் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன், முதுகு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி காரணமாக இன்றைய போட்டியில் கோலி பங்கேற்க மாட்டார் என டாஸின்போது அறிவிக்கப்பட்டது. இதனால், கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டார். கேப்டனாக ராகுல் களமிறங்க, டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். 1990-ம் ஆண்டு இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக முகமது அசாருதீன் வழிநடத்தினார். அவரை அடுத்து, ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக செயல்பட்ட கிரிக்கெட்டர் என்ற ஒரு ரெக்கார்டுக்கு ராகுல் சொந்தக்காரர்.


மயங்க், புஜாரா, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து ராகுல் மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், 13வது அரை சதத்தை அடித்து அசத்தினார் ராகுல்.


மேலும் படிக்க: Ind vs SA, 2nd Test Match Highlights: முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் இந்தியாவை முடித்த தென் ஆப்பிரிக்கா..!


ராகுல் மன்னிப்பு கேட்ட வீடியோ:






ராகுலை அடுத்து அஷ்வின் மட்டும் நிதானமாக நின்று 46 ரன்கள் குவித்தார். அவருடன் களத்தில் நிற்காமல் மற்ற பேட்டர்கள் விக்கெட்டுகளை கொடுத்தனர். இதனால், முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண