டிஎன்பிஎல் ஏழாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணியை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.



முதல் இன்னிங்ஸ்:


மதுரை பேந்தர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அர்ஜுன் 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்த ஆட்டம் இழந்தார். மற்றொரு முனையில் களமிறங்கிய வசீம் அகமத் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வசீம் அகமது 31 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது அவரது முதல் டிஎன்பிஎல் அரை சதம் ஆகும். அவருடன் இணைந்து ஆடிய சாம் சுந்தர் 28 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய் யாதவ் மற்றும் வசீம் அகமது சிறப்பாக விளையாடி ரன்களை அதிரடியாக குவித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மதுரை பேந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர் வசீம் அகமது 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருடன் இணைந்து ஆடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டுமிடக்காமல் இருந்தார். திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் சிறப்பாக வந்து வீசிய சப்னல் சிங் மற்றும் அலெக்ஸாண்டர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மதுரை பேந்தர்ஸ் 193 ரன்களை எடுத்தது. 



இரண்டாவது இன்னிங்ஸ்: 


194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலில் விக்கெட்டை பறிகொடுக்க தொடங்கினர். தொடக்க வீரராக களம் இறங்கிய லோகேஷ்வர் ஐந்து பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கௌஷிக் 3 பந்துகளில் ஒரு ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுமுனையில் களமிறங்கிய தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் பொறுமையாக விளையாடி 20 பந்துகளில் 39 ரகளை அடித்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மதுரை பேந்தர்ஸ் அணியின் வீரர்களான சப்நில் சிங் 18 ரன்களுக்கும், அகரம் கான் 11 ரன்களுக்கும், சசி தேவ் 17 ரன்களுக்கும், குருஜிப்நித் சிங் 2 ரன்களுக்கும், கடந்த போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து மதுரை அணியை வெற்றி பெற செய்த முருகன் அஸ்வின் 4 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய சஞ்சய் யாதவ் மற்றும் ராஜ்குமார் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று அதிசயராஜ் இரண்டு விக்கெட்களும், சரவண குமார் மற்றும் ஈஸ்வரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். மதுரை பேந்தர்ஸ் அணி 17வது ஓவரில் 129 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இதன் மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி பெற்றது. திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து 55 பந்துகளில் 90 ரன்களை எடுத்த வசீம் அகமது ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.