லாலா அமர்நாத்:


இந்திய அணியின் முன்னாள் வீரர் லாலா அமர்நாத 24 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். அதில் 878 ரன்கள் எடுத்துள்ள அவர் 45 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதேபோல், 186 முதல்தர கிரிக்கெட் போட்டியில் 10,426 ரன்களை குவித்துள்ள அவர் 463 ரன்களை வீழ்த்தியுள்ளார்.


இர்பான் பதான்:


இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இதுவரை 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 1,544 ரன்களும் 173 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல், 29 டெஸ்ட் போட்டியில் 1,105 ரன்களும் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். மேலும், 24 டி 20 போட்டியில் விளையாடியுள்ளார். அதில் 172 ரன்களும் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


ஹர்திக் பாண்டியா:


ஹர்திக் பாண்டியா 86 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 1769 ரன்களும், 84 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல், 11 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 532 ரன்களும்,17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 92 டி20 போட்டியில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா 1348 ரன்களும் 73 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளர்.


கபில் தேவ்:


இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் இதுவரை 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 3783 ரன்களும் ,253 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தி இருக்கிறார். அதேபோல், 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5248 ரன்களும், 434 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளர். மேலும், 275 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 11356 ரன்களும், 835 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.


மனோஜ் பிரபாகர்:


மனோஜ் பிராபகர் இந்திய அணியின் முன்னாள் வீரர். இவர் இதுவரை 130 ஒரு நாள் போட்டியில் 1858 ரன்களும், 157 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல், 39 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1600 ரன்களையும், 96 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். மேலும், 154 முதல் தர போட்டிகளில் விளையாடி 7469 ரன்களும் 385 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.


மொஹிந்தர் அமர்நாத்:


இந்திய அணியின் முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் 130 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில். 1924 ரன்களும், 46 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல், 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 4378 ரன்களும், 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 154 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 13747 ரன்களும், 277 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


ரவி சாஸ்திரி:


இந்திய அணியின் முன்னாள் வீரட் ரவி சாஸ்திரி இதுவரை 150 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதில், 3830 ரன்களும், 151விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல், 80 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர் 3108 ரன்களும் 129 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 245 முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள இவர் 13202 ரன்களும், 509 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.


வினு மங்கட்:


இந்திய அணியின் முன்னாள் வீரர் வினு மங்காட் 44 டெஸ்ட் போட்டியில் விளையாடி 2109 ரன்கள் மற்றும் 162 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். அதேபோல், 233 முதல் தர கிரிக்கெட் 11591 ரன்களும், 782 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


ரவிச்சந்திரன் அஸ்வின்:


இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 116 ஒரு நாள் போட்டிகள் விளையாடி 707 ரன்களும், 156 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 490 விக்கெட் மற்றும் 65 டி 20 போட்டியில் விளையாடி 184 ரன்களும் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


ரவீந்திர ஜடேஜா:


ரவீந்திர ஜடேஜா 197 ஒரு நாள் போட்டியில் விளையாடி 2756 ரன்களும், 220 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல், 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2804 ரன்களும், 275 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும், 66 டி 20 போட்டியில் விளையாடியுள்ள ஜடேஜா 480 ரன்களும் 53 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.