தனது அறிமுக போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் மர்ஃபி. அதேபோல், இந்தியாவுக்கு எதிராக ஒருவர் தனது அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுப்பது இதுவே முதல் முறை என்பதும் மர்ஃபிக்கு புதிய மைல்கல்லில் இரட்டை மகிழ்ச்சியான சம்பவமாக அமைந்துள்ளது. 


அவர் 2021 இல் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்டோரியாவுக்காக தனது முதல் தர கிரிக்கெட்டில்  அறிமுகமானார். அந்த ஆட்டத்தில், அவர் 47 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து இருந்தார்.  அதேபோல், U-19 உலகக் கோப்பை ஒவ்வொரு இளம் கிரிக்கெட் வீரருக்கும் மிகச் சிறப்பான முதல் படியாகக் கருதப்படுகிறது.  டோட் மார்பி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஜூனியர் வீரர்களுக்கான உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக களமிறங்கினார். 


இந்த தொடரில் ஆஸ்திரேலியா வெற்றிபெறவில்லை என்றாலும், இந்த தொடரில்  மிகவும் கவனிக்கப்படும் வீரராக இருந்தார் மர்ஃபி.  அந்த தொடரில் மட்டும் அவர் ஐந்து ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். மேலும், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சாக 2-40 என இருந்தது. அதேபோல் தற்போது, மர்ஃபி இப்போது பிபிஎல்லில் லியோனின் அணியான சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.


எட்டு அடி பாய்ந்த தந்தை - பதினாறு அடிக்கும் மேல் பாயும் மகன் 


இவ்வளவு இளம் வீரரின் தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். ஆனால் அவர் சர்வதேச மட்டத்திற்கு வரவில்லை, மேலும் மறைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னுடன் மெல்போர்னில் விளையாடியுள்ளார். 1990களின் முற்பகுதியில், ஜேமியும் வார்னும் செயின்ட் கில்டாவுக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 






அவரது தந்தை, ஜேமி மர்பி அதிகாலை 2 மணிக்கு மோமாவிலிருந்து புறப்பட்டு, மூன்று மணிநேரம் காரில் மெல்போர்னுக்குச் சென்று, பின்னர் சிட்னியில் இருந்து விமானம் மூலமாக பெங்களூரு வழியாக நாக்பூருக்குச் சென்று தனது மகன் விளையாடுவதை நேரடியாக பார்க்க வந்துள்ளார். மர்ஃபியின் சகோதரர் ஜோயல், மாமா ட்ராயும் போட்டியை காண நாக்பூர் வந்துள்ளார். 


தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் தொடர் 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா தனது ஆடும் லெவன் அணியில் இரண்டு ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர்களை தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும். ஒருவர் அனுபவமிக்க நேதன் லியான் மற்றும் டோட் மர்ஃபி மற்றவர்.