தமிழக கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் தமிழ்நாட்டு அளவில் நடத்தப்படும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் டி.என்.பி.எல். நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


சேலத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் கோபிநாத்தும், ஜாபர் ஜமாலும் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டத்தின் 5வது ஓவரை சுழற்பந்துவீச்சாளர் சித்தார்த் மணிமாறன் வீசினார்.




அவரது ஓவரின் முதல் பந்திலே தொடக்க வீரர் ஜாபர் ஜமால் 6 ரன்களில் அவுட்டானார். அவருக்கு பிறகு களமிறங்கிய அக்‌ஷய் ஸ்ரீனிவாசன் சித்தார்த் மணிமாறனின் அடுத்த பந்திலே விக்கெட் கீப்பர் ஜெகதீசனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால், சித்தார்த் மணிமாறன் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பாரா? என்று கேள்வி எழுந்தது. ஆனால், அடுத்து களமிறங்கிய டேரில் பெரராரியோ அதை தடுத்து விட்டார்.






ஆனாலும், சித்தார்த் மணிமாறன் வீசிய அதே ஓவரின் கடைசி பந்தில் ரன் எதுவுமே எடுக்காமல் டேரில் பெராரியோ ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் மட்டும் சித்தார்த் மணிமாறன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் மட்டும் சித்தார்த் மணிமாறன் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்தது.




இதைத்தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கேப்டன் கவுசிக் காந்தியும், ஜெகதீசனும் அருமையான தொடக்கம் அளித்தனர். இதனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில மிகவும் எளிதாக வெற்றி பெற்றது. சித்தார்த் மணிமாறன் ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 மேலும் படிக்க :   ENG vs SA 1st ODI: வான்டர்டுசென் சதம்..! 333 ரன்கள் விளாசிய தெ. ஆப்பிரிக்கா..! ஸ்டோக்சை வெற்றியுடன் வழியனுப்புமா இங்கிலாந்து..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண