நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் காயம் விலகினார். வலது இடுப்பு காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு காயத்திலிருந்து குணமடைய வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சையும் மேற்கொண்டார். இதன் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தையும் அவர் இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த மாதம் ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கே.எல் ராகுலுக்கு தற்போது மீண்டும் வருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) அவர் வியர்வை சிந்தி பயிற்சி மேற்கொண்டார். கடந்த திங்களன்று, இந்திய தொடக்க வீரர் கே.எல் ராகுல் ஜூலன் கோஸ்வாமி பந்து வீச்சில் பேட்டிங் ப்ராக்டிக்ஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் படு வேகமாய் வைரலாகி வருகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாத கோஸ்வாமி, மீண்டும் களமிறங்குவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் பங்களாதேஷுக்கு எதிராக அவர் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை விளையாடினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் வெற்றிக்கு பிறகு, இந்திய அணி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என்றும், டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமை தாங்குவார் என்றும் பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடருக்கான 18 பேர் கொண்ட அணியில் கே.எல் ராகுலை தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் இந்த போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு கே.எல் ராகுல் உடற்தகுதி சோதனைக்கு ஆஜராக வேண்டும்.
கே.எல் ராகுலுடன், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்வதற்கு முன், தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், ரவி பிஷ்னோய், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்