தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 7வது சீசனுக்கு பிறகு, இத்தாண்டு முதல் முதன் முறையாக ஏலத்தில் அடிப்படையில் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 942 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவிட்டுள்ளனர். 


8 அணிகளும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து இருக்க வேண்டும். 


இந்தநிலையில், இன்று மதியம் டிஎன்பிஎல் ஏலமானது மகாபலிபுரத்தில் உள்ள ஐடிசி கென்சஸ் ஹோட்டலில் தொடங்கியது.


இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் முதல் வீரராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை 10.25 லட்சத்திற்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலம் எடுத்தது. அதனை தொடர்ந்து இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ. 6.75 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. 


அதேபோல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனை திருச்சி அணி ரூ. 6. 25 லட்சத்திற்கு ஏலம் எடுக்க, கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ. 8.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. 


தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விக்கெட்களை அள்ளிய வருண் சக்கரவர்த்தியை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ. 6.75 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது. இதையடுத்து ஏ பிரிவு வீரர்களுக்கான ஏலம் முடிந்த நிலையில், பி பிரிவு வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பாபா இந்திரஜித்தை 6 லட்சத்திற்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வாங்கியுள்ளது. 


ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:



  • விஜய் ஷங்கர் – 10.25 லட்சம் – திருப்பூர் தமிழர்கள் ஐட்ரீம்

  • சந்தீப் வாரியர் – 8.25 லட்சம் – நெல்லை ராயல் கிங்ஸ்

  • வாஷிங்டன் சுந்தர் – 6.75 லட்சம் – மதுரை பாந்தர்ஸ்

  • வருண் சக்ரவர்த்தி – 6.75 லட்சம் – திண்டுக்கல் டிராகன்ஸ்

  • டி நடராஜன் - 6.25 லட்சம் - ரூபி திருச்சி வாரியர்ஸ்


அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்:


சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.61,00,000)



  • என்.ஜெகதீசன் - பி பிரிவு

  • சசிதேவ்.யு - சி பிரிவு


திண்டுக்கல் டிராகன்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.60,00,000)



  • ரவிசந்திரன் அஸ்வின்- ஏ பிரிவு 


ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.68,50,000)



  • துஷார் ரஹேஜா - டி பிரிவு 


LYCA கோவை கிங்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.62,50,000)



  • ஷாருக் கான்  - பி பிரிவு

  • சுரேஷ் குமார் -  டி பிரிவு


நெல்லை ராயல் கிங்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.62,50,000)



  • அஜிதேஷ் -  பி பிரிவு

  • கார்த்திக் மணிகண்டன்  -  டி பிரிவு


ரூபி திருச்சி வாரியர்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.64,00,000)



  • ஆண்டனி தாஸ் - பி பிரிவு


சேலம் ஸ்பார்டன்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.67,00,000)



  • கணேஷ் மூர்த்தி  - சி பிரிவு


Siechem மதுரை பாந்தர்ஸ் - (மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.68,50,000



  • கௌதம் - டி பிரிவு


ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் 70 லட்சத்தை மொத்த தொகையாக கொண்டே, தங்கள் அணிக்கான வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். 8 அணிகளும் ஏலத்தில் குறைந்தபட்சம் 16 வீரர்களிலிருந்து, அதிகபட்சமாக 20 வீரர்களை தேர்வு செய்யலாம்.