இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயத்திலிருந்து மீண்ட கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் போன்ற நட்சத்திர வீரர்கள் திரும்பியுள்ளனர். மேலும், ஆஸ்திரேலியாவின் இந்த ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பும் பேட் கம்மின்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.


கிளென் மேக்ஸ்வெல் காலில் ஏற்பட்ட காயத்திலிருந்தும், மிட்செல் மார்ஷ் கணுக்கால் காயத்திலிருந்து சமீபத்தில் மீண்டுள்ளார்.  கடந்த வாரம், இந்த இரண்டு வீரர்களும் உள்நாட்டு போட்டியில் விளையாடுவதை காண முடிந்தது. இந்த இரண்டு அனுபவ வீரர்களின் வருகை ஆஸ்திரேலிய அணிக்கு வலு சேர்க்கும். 


ஆஸ்திரேலியா அறிவித்த ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் தற்போது இந்திய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலியா அறிவித்த 16 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் அணியில் 9 வீரர்கள் தற்போது இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியா ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 


ஒருநாள் தொடர்:


மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி (மும்பை வான்கடே மைதானம்)
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி (டாக்டர். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம்)
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி (எம்ஏ சிதம்பரம் மைதானம் - சென்னை)


இந்த மூன்று போட்டிகளில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு இந்த ஒருநாள் தொடர் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. 


ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.


இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி , முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.