ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே கடந்த மார்ச் 4-ம் தேதி காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. அவருக்கு வயது 52 . கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் திடீர் மறைவால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். 


கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷேன் வார்னே. சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக 1992ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


இந்நிலையில், மறைந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவுக்கு நிரந்தர அஞ்சலி செலுத்தும் வகையில்,  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள MCG மைதானத்தில் உள்ள கிரேட் சதர்ன் ஸ்டாண்ட் “ஷேன் வார்ன் ஸ்டாண்ட்” என மறுபெயரிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வார்னே இங்கு தான் ஹாட்ரிக் மற்றும் 700வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 






அதனை அடுத்து, இன்று கிரிக்கெட் நட்சத்திரங்கள், 50000 ரசிகர்கள் கலந்து கொண்டு வார்னேவுக்கு நிரந்திர அஞ்சலி செலுத்து கவுரவித்தனர். ஷேன் வார்னேவின் குழந்தைகளான ப்ரூக், ஜாக்சன், சம்மர் ஆகியோர் இந்த ஸ்டாண்டை திறந்து வைத்தனர். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க வார்வேவை வழிஅனுப்பி வைத்துள்ளனர்.






இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண