நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்க அணியும் இன்று நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் இந்திய அணிக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 274 ரன்களை எடுத்தது. ஆனாலும், தென்னாப்பிரிக்க அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டி இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கனவை தகர்த்தது.
இந்த போட்டியில் இந்திய அணி உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறது. மேலும், இந்திய கேப்டன் மிதாலிராஜிற்கும், இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமிக்கும் இந்த போட்டியே கடைசி உலககோப்பை ஆகும். இதனால், இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகமடைந்தனர். இந்த போட்டியில் இந்தியாவின் கேப்டன் மிதாலிராஜ் 68 ரன்கள் எடுத்தார். அவர் 84 பந்தில் 8 பவுண்டரியுடன் 68 ரன்களை எடுத்திருந்தார். அனுபவ பந்துவீச்சாளரான ஜூலன் கோஸ்வாமி இந்த போட்டியில் களமிறங்கவில்லை.
மிதாலிராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி இருவருக்கும் சுமார் 40 வயதை எட்டிவிட்டதால் அடுத்த உலககோப்பை தொடரில் இருவரும் ஆடுவது என்பது மிகவும் கடினம் ஆகும். 40 வயதான மிதாலிராஜ் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 699 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 1 சதம், 1 இரட்டை சதம் மற்றும் 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 214 ரன்களை எடுத்துள்ளார். 232 ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார். அவற்றில் 7 ஆயிரத்து 805 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 125 ரன்களை குவித்துள்ளார். 7 சதங்கள் அடித்துள்ளார். 64 அரைசதம் அடித்துள்ளார். மேலும், 89 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 364 ரன்களையும் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 97 ரன்களை எடுத்துள்ளார்.
40 வயதான ஜூலன் கோஸ்வாமியும் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 201 ஒருநாள் போட்டிகளில் ஆடி 252 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 68 டி20 போட்டிகளில் ஆடி 56 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக பல்வேறு அரிய சாதனைகளை படைத்த மிதாலிராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி இருவரும் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடியவர்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளனர். இருவரது அடுத்த உலககோப்பை தொடர்களில் ஆட முடியாதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Chris Gayle IPL Record: ஐ.பி.எல். வரலாற்றின் கரிபீயன் சகாப்தம்..! நெருங்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரன்..! சிக்ஸ் மெஷின் க்ரிஸ் கெயில்..!
மேலும் படிக்க : IND vs SA Womens: கனவு தகர்ந்தது.. அரையிறுதி வாய்ப்பு பறிபோனது! உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்