மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


மழை காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனைகள் ஹெய்ன்ஸ் மற்றும் ஹேலி ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் தடுமாறினர். தொடக்க வீராங்கனை ஹேலி அதிரடியாக ஆடி சதமடித்தார்.


விக்கெட் கீப்பர் ஹேலி 107 பந்தில் 17 பவுண்டரி 1 சிக்ஸருடன் 129 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது ஆஸ்திரேலியா 216 ரன்கள் எடுத்திருந்தது. அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீராங்கனை ஹேய்ன்சும் ஆட்டமிழந்தார். அவர் 100 பந்தில் 9 பவுண்டரியுடன் 85 ரன்கள் எடுத்தார். அடுத்த சிறிது நேரத்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 45 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது.


இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றால் என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனை ரஷதா வில்லியம்ஸ் டக் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த டோட்டினும், ஹேலி மேத்யூசும் நிதானமாக ஆடினார். அணியின் ஸ்கோர் 44 ரன்கள் எட்டியபோது டோட்டின் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய கேப்டன் டெய்லர்- ஹேலி மேத்யூஸ் ஜோடி அணியை மீட்கும் நோக்கத்தில் ஆடியது.


அணியின் ஸ்கோர் 91 ரன்களை எட்டியபோது ஹேலி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் அனைவரும் பொறுப்பற்ற முறையில் பேட் செய்தனர். விக்கெட் கீப்பர் கேம்பெல்லே 8 ரன்களிலும், சேடியன் 7 ரன்களிலும், கைசியா நைட் டக் அவுட்டாகியும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஸ்டாபேனெி டெய்லர் 8வது விக்கெட்டாக வெளியேறினார். அவர் 75 பந்தில் 4 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ஓவர்கள் முடிவில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி ப்ரவுன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண