உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவர் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுகளுக்கு மேல் இரண்டு பேர் மட்டுமே எடுத்துள்ளனர். அதில் ஒருவர் ஷேன் வார்னே. குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சுழற்பந்தின் மூலம் எதிர் அணி வீரர்களை கதி கலங்க வைக்கும் திறன் ரசிகர்களை வியக்க வைத்தது.
ஷேன் வார்னே மரணத்தில் தொடரும் மர்மம்:
இப்படி, உலக கிரிக்கெட்டை ஆட்டி படைத்து வந்த ஷேன் வார்னே, கடந்தாண்டு மார்ச் மாதம், திடீரென மரணம் அடைந்தார். இது, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பதில் பலர் சந்தேகங்களை கிளப்பி வந்தனர்.
விடுமுறைக்காக தாய்லாந்து சென்ற அவர், கோ சாமுயில் உள்ள ஆடம்பர வில்லாவில் தங்கியிருந்தார். அப்போது, மயக்கமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது பல சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. பிரேதப் பரிசோதனையில் இயற்கையான காரணங்களால் வார்னே உயிரிழந்தார் என்று தாய்லாந்து போலீஸார் கூறினர். இருப்பினும், இதில் தொடர் மர்மம் நிலவி வந்தது.
வார்னே உயிரிழந்து ஒரு வருடத்திற்கு மேலான நிலையில், பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் நாட்டின் முன்னணி இருதயநோய் நிபுணரான டாக்டர் அசீம் மல்ஹோத்ரா மற்றும் டாக்டர் கிறிஸ் நீல், "அவரது திடீர் மரணம், அவர் ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்கு முன்பு எடுத்த கோவிட் எம்ஆர்என்ஏ தடுப்பூசியால் நிகழ்ந்திருக்கலாம்.
பிரேத பரிசோதனை முடிவுகள் சொல்வது என்ன?
ஷேன் வார்னே, இரண்டு டோஸ் ஃபைசர் எம்ஆர்என்ஏ கோவிட் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளார். 52 வயதான வார்னேவின் பிரேத பரிசோதனை முடிவுகளில் அவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டது அல்லது இதய நோய் இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா எம்ஆர்என்ஏ தடுப்பூசியால் அவரது ரத்தக்குழாயில் விரைவாக அடைப்பு ஏற்பட்டிருப்பது நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்தது. குறிப்பாக, ஏற்கனவே கண்டறியப்படாத லேசான இதய நோய் உள்ளவர்களுக்கு இப்படி நடக்கலாம். முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு இவ்வளவு இளம் வயதில் திடீரென மாரடைப்பு ஏற்படுவது மிகவும் அசாதாரணமானது.
அதே நேரத்தில், ஷேன் சமீபத்திய ஆண்டுகளாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கவில்லை. அதிக எடையுடன் இருந்துள்ளார். புகைப்பிடிப்பவராக இருந்துள்ளார். அவரது, ரத்தக்குழாயில் லேசான அடைப்பு ஏற்டிருக்கலாம். இப்படிதான், எனது பழைய நோயாளுகளுக்கும் நடந்துள்ளது. இதன் காரணமாகதான், எனது தந்தை உயிரிழந்தார்.
ஃபைசர் எம்ஆர்என்ஏ கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு, அடைப்பு பெரிதாகி இருக்கிறது. இந்த தடுப்பூசிகளால் ஏற்படும் தீவிரமான பாதகமான இதய விளைவுகளுக்கான சான்றுகள் மிக அதிகம். மேலும் ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கிலும் நாம் காணும் அதிகப்படியான இறப்புகளுக்கு கோவிட் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் முக்கிய காரணம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
மேலும் மக்கள் பாதிக்கப்படுவதையும், தேவையில்லாமல் இறப்பதையும் தடுக்க, உலகம் முழுவதும் அவற்றின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது" என்றார்.