தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 2023 இன் 11வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, பால்சி திருச்சி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 3லிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம், நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக திண்டுக்கல் அணி இருந்து வருகிறது. 

3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று,   1.623 என்ற நிகர ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், கோவை கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் 2வது இடத்தில் உள்ளது. 

இரண்டாவது தோல்விக்கு பிறகு சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 3வது இடத்தில் உள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் 4வது இடத்திலும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஐடிரீம் திருப்பூர் தமிழர்கள் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். பால்சி திருச்சி 3 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளுடன் 7வது இடத்திலும், மதுரை பாந்தர்ஸ் 2 போட்டிகளில் விளையாடி 2 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

TNPL 2023 புள்ளிகள் அட்டவணை

எண் அணி போட்டிகள் வெற்றி  தோல்வி முடிவு இல்லை நிகர ரன் ரேட் புள்ளிகள்
1 திண்டுக்கல் டிராகன்ஸ் 3 3 0 0 +1.623 6
2 லைகா கோவை கிங்ஸ் 4 3 1 0 +1.436 6
3 சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 2 2 0 +0.745 4
4 நெல்லா ராயல் கிங்ஸ் 3 2 1 0 +0.648 4
5 சேலம் ஸ்பார்டன்ஸ் 2 1 1 0 -0.183 2
6 IDream திருப்பூர் தமிழர்கள் 3 1 2 0 -1.497 2
7 பா11சி திருச்சி 3 0 3 0 -1.651 0
8 Siechem மதுரை பாந்தர்ஸ் 2 0 2 0 -2.865 0

நேற்றைய போட்டி சுருக்கம்: 

12வது போட்டி - பால்ஸி திருச்சி vs லைக்கா கோவை கிங்ஸ்

திண்டுக்கல் என்பிஆர் ஸ்டிடேயத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு பால்ஸி திருச்சி அணியும், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில், முதலில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். திருச்சி அணியில் அதிகபட்சமாக கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ 58 ரன்களும், ராஜ்குமார் 31 ரன்களும் எடுத்திருந்தனர். 

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 18.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை துரத்தியது. தொடக்க வீரராக உள்ளே வந்த சுஜாய் 72 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 

11வது போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் vs சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்

ரவி அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் திண்டுக்கல் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.